Categories: latest news

இதுக்கு பயந்தா கங்குவா தள்ளி வச்சீங்க!..எவ்வளவு வடை சுட்டாலும் கஷ்டம்தான்!. கலாய்க்கும் பிரபலம்!..

Vettaiyan: ரஜினி, விஜய், அஜித் போன்ற அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களின் படங்கள் வெளியானால் முதல் நாளே 100 கோடி வசூல், இது அந்த படத்தின் வசூலை தாண்டிவிட்டது. இந்த படத்தின் வசூலை தாண்டிவிட்டது என அந்த நடிகர்களின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அடித்துவிடுவார்கள்.

ரசிகர்கள் மட்டுமல்ல. மூவி டிராக்கர்ஸ் என்கிற பெயரில் பலரும் இது போல பொய்யான வசூலை சொல்லி புள்ளிவிபரம் சொல்வார்கள். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் இவர்கள் யாரிடமும் நடுநிலை இருக்காது. இந்த நடிகரை பிடிக்கும்… அந்த நடிகரை பிடிக்காது என்பது மட்டுமே அடிப்படையில் காரணமாக இருக்கும். இல்லையெனில், பொய்யான தகவலை உண்மை போல் சொல்லி இருப்பார்கள்.

இதில் சிக்கல் என்னவெனில் சமூகவலைத்தளங்களில் சொல்லப்படும் இப்படி பொய்யான வசூலை பலரும் நம்புவார்கள். ஆனால், உண்மையான வசூல் என்ன என்பது தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தருக்கு மட்டுமே தெரியும். இதுபுரியாமல் பலரும் இதை சமூகவலைத்தளங்களில் பகிர்வார்கள். இது பல வருடங்களாக நடந்து வருகிறது.

லைக்கா தயாரிப்பில் ரஜினி நடித்து நேற்று வெளியான திரைப்படம்தான் வேட்டையன். ஜெயிலருக்கு பின் வெளியாகியிருக்கும் இந்த படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே, முன்பதிவில் இப்படம் சாதனை செய்து பல நாட்களுக்கும் டிக்கெட் விற்று தீர்ந்தது.

இந்நிலையில், இப்படம் முதல் நாள் தமிழகத்தில் 30 கோடியை வசூல் செய்துள்ளது என சிலர் சொல்லி வருகிறார்கள். அதோடு, கண்டிப்பாக இப்படம் ஆயிரம் கோடியை வசூல் செய்யும் எனவும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். சிலரோ, கோட் படத்தின் முதல் நாள் வசூலை கூட வேட்டையன் தாண்டவில்லை என பதிவிட்டு வருகிறார்கள்.

ஒருபக்கம், வேட்டையன் படம் முதல் நாள் பெரிய வசூலெல்லாம் இல்லை என புளூசட்டமாறன் சொல்லி வருகிறார் மேலும் ‘இந்த தடவை மூணு ஷிப்ட்டு போட்டு வடை சுட்டாலும் கஷ்டம்தான் போல.. இதுக்கு பயந்தா கங்குவாவை தள்ளி வச்சீங்க?’ என பதிவிட்டு நக்கலடித்திருக்கிறார்.

ராம் சுதன்

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

5 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

6 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

13 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

14 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

15 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago