2024-ல் மூன்று படங்கள்தான் ஹிட்!.. ராயன்லாம் பிளாப்!.. கொளுத்திப்போட்ட பிரபலம்!...

by ராம் சுதன் |

சினிமா துறை லாபத்தில் மட்டுமே இயங்கி வந்தது 80, 90களில்தான். எப்படிப்பட்ட சுமாரான படமாக இருந்தாலும் 25 நாட்கள் தியேட்டர்களில் ஓடும். கரகாட்டக்காரன் படம் கூட படம் வெளியாகி முதல் ஒரு வாரம் கூட்டம் இல்லை. அதன்பின்னரே அப்படம் பிக்கப் ஆனது. பல ஹிட் படங்களுக்கும் அப்படி நடந்திருக்கிறது.

ரஜினி, விஜயகாந்த், மோகன், ராமராஜன், டி ராஜேந்தர் படங்கள் என்றாலே ரசிகர்கள் தியேட்டரில் குவிந்துவிடுவார்கள். மற்ற நடிகர்களின் படங்கள் பெரிய வெற்றி இல்லை என்றாலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் இருக்காது. ஏனெனில் அப்போது பொழுதுபோக்கு என்பது சினிமாவாக மட்டுமே இருந்தது.

ஆனால், தொலைக்காட்சி சீரியல்கள் வந்த பின் தியேட்டருக்கு போகும் பெண்களின் எண்ணிக்கை அப்படியே குறைந்து போனது. இப்போது பெரும்பாலும் இளைஞர்கள் மட்டுமே தியேட்டருக்கு போகிறார்கள். அவர்களை நம்பியே சினிமா உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. அதனால்தான் திரைப்படங்களில் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவுக்கு 2024ம் வருடத்தின் முதல் பாதி சரியாக அமையவில்லை என்றுதால் சொல்ல வேண்டும். ஜனவரி மாதம் வெளியான கேப்டன் மில்லர், அயலான் என 2 படங்களுமே ஓடவில்லை. அதன்பின் எத்தனையோ படங்கள் வெளியானது. ஆனால், ஓடவில்லை. அதேநேரம், மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது.

அதன்பின் மலையாள படமான பிரேமலு நல்ல வசூலை பெற்றது. ஆனால், தமிழ் படங்களுக்கு தியேட்டரில் காத்து வாங்கியது. சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 படம் 80 கோடிக்கு மேல் வசூல் செய்து 2024ல் ஓடிய முதல் திரைப்படம் என்கிற பெயரை பெற்றது. அதன் பின் சூரி நடித்த கருடன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா ஆகியவை வெற்றிப்படங்களாக அமைந்தது.

இந்நிலையில், பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் டிவிட்டரில் ‘2024ம் வருடம் தமிழில் இதுவரை 135 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில், அரண்மனை 4, கருடன், மகாராஜா ஆகிய 3 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மலையாள படமான பிரேமலு சூப்பர் ஹிட். மஞ்சுமெல் பாய்ஸ் படம் உண்மையான பிளாக்பஸ்டர் என குறிப்பிட்டிருக்கிறார். ‘அப்படின்னா ராயன் ஹிட் இல்லையா?’ என ஒருவர் கேட்டதற்கு ‘பிளாப்’ என சொல்லி இருக்கிறார்.

ராயன் படம் சூப்பர் ஹிட் போல ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். உண்மையான வசூலை அவர்கள் சொல்லவில்லை என்றே பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

Next Story