மெகா ஃபிளாப்!.. கோட் வசூலில் 50 சதவீதம் கூட இல்லை!.. வேட்டையனை விடாமல் துரத்தும் புளூசட்ட மாறன்!..
Vettaiyan: ரஜினி நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம்தான் வேட்டையன். என்கவுண்ட்டர் பற்றி அலசியிருக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் மஞ்சு வாரியர், அமிதாப்பச்சன், ரித்திகா சிங், துஷரா விஜயன், ராணா, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். லைக்கா தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
வேட்டையன் படத்திற்கு பெரிய புரமோஷன் செய்யப்படவில்லை. இசை வெளியீட்டு விழா மட்டுமே நடந்தது. லியோ படம் வெளியானபோது லோகேஷ் கனகராஜ் 10க்கும் மேற்பட்ட யுடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்தார். ஆனால், வேட்டையன் பட இயக்குனர் த.ச ஞானவேல் அப்படி எதுவும் செய்யவில்லை.
2 சேனல்களுக்கு மட்டுமே அவர் பேட்டி கொடுத்தார். ஒருபக்கம், பெரிய நடிகர் படமெனில் சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், பெங்களூர், மும்பை போன்ற ஊர்களில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசுவார்கள். வேட்டையன் படத்தில் அதுவும் நடக்கவில்லை.
ரஜினி இருக்கும்போது எதுவும் தேவையில்லை என லைக்கா நினைத்துவிட்டதா என்பதும் தெரியவில்லை. ஒருபக்கம், படத்திற்கும் கலவையான விமர்சனம் வந்ததால் ஜெயிலர் அளவுக்கு இப்படம் வசூலை எட்டவில்லை. முதல் நாள் தமிழ்நாட்டில் 17 கோடி மட்டுமே வசூல் செய்தது. வெள்ளி, சனி பெரிதாக இல்லை. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 21 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
ஒருபக்கம், அமிதாப்பச்சன் இருந்தும் ஹிந்தியில் வேட்டியன் படம் செல்ப் எடுக்கவில்லை. ஆனால், படம் வெளியாகி 4 நாட்களில் இப்படம் 240 கோடியை வசூல் செய்ததாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், அதில் உண்மையில்லை என்கிறார் பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன்.
4 நாட்களில் தமிழகத்தில் 37 கோடி, வட இந்தியாவில் 1.75 கோடி, உலக அளவில் 181 கோடியை மட்டுமே வேட்டையன் வசூல் செய்திருக்கிறது. வேட்டையன் படம் மெகா பிளாப். வட இந்தியாவில் பெரிய தோல்வி. இந்த வாரம் தமிழகத்தில் மழை என்பதால் ஒரு வசூலும் இருக்காது. கோட் பட வசூலில் 50 சதவீத வசூலை கூட கோட்டையன் பெறவில்லை’ என டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.