கங்குவா படத்தில் நடிக்க ஆசைப்பட்ட ஹாலிவுட் நடிகர்!.. போட்டு பொளக்கும் புளூசட்டமாறன்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:32:53  )

Kanguva: நடிகர் சூர்யாவின் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் கங்குவா என்கிற படத்தில் நடிக்கப்போனார். ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி முடித்துவிட்டு கங்குவா படத்தை எடுக்கப்போனார் சிறுத்தை சிவா.

கங்குவா படத்தில் நிறைய கிளைக்கதைகள் உண்டு. எனவே, பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதோடு, படம் துவங்கும்போதே இரண்டு பாகம் எனவும் முடிவெடுத்தனர். இந்த படத்திற்காக சூர்யா 2 வருடமாக தனது உழைப்பை கொட்டியிருக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகியிருக்கிறது. எனவே, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ் உள்ளிட்ட பல மொழிகளிலும் இப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் வசூலை அள்ளிவிட வேண்டும் என ஆசைப்படும் ஞானவேல் ராஜா இப்படம் பற்றி புரமோஷன் செய்து வருகிறார்.

போகுமிடமெல்லாம் கங்குவா 2 ஆயிரம் கோடி வசூல் பண்ணும் என அடித்துவிடுகிறார். இதுபற்றி சூர்யாவிடம் செய்தியாளர் கேட்டதற்கு ‘பெரிதாக கனவு காண்பதில் என்ன தவறு?’ என கேட்டார். ஒருபக்கம் சூர்யாவும் மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்று புரமோஷன் செய்து வருகிறார்.

ஒருபக்கம், கங்குவா பட புரமோஷனில் சொல்லப்படும் விஷயங்களை பிரபல யுடியூபர் புளூசட்ட மாறன் கிண்டலடித்து வருகிறார். 'படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் பார்ப்பார்கள். ஏன் பில்டப் செய்கிறீர்கள்?' என்பதுதான் அவரின் கருத்தாக இருக்கிறது. இந்நிலையில், கங்குவா 2 படத்தில் ஒரு காட்சியிலாவது சூர்யாவுடன் நடித்துவிட வேண்டும் என ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் ஆசைப்பட்டார் என பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு ‘படம் நன்றாக இருந்தால் நீங்க என்ன பண்ணுவீங்க?’ என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு ‘படம் நன்றாக இருக்கிறது என சொல்லப்போகிறோம். ஏன் தினமும் வடை சுட்டுகொண்டு இருக்கிறீர்கள்?’ என கேள்வி எழுப்பி இருக்கிறார் புளூசட்ட மாறன்.

Next Story