Categories: latest news

அன்று கேப்டன். இன்று விஜயா? டப்பா டான்ஸ் ஆடிவிடும்.. வடிவேலுவை தாக்கிய ப்ளூசட்டை மாறன்

மீண்டும் திமுகவிற்காக பேச ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. நிச்சயமாக முதல்வர் ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர் என நேற்று மேடையில் பேசினார். ஏற்கனவே விஜயகாந்துக்கு எதிராக திமுகவிற்கு ஆதரவாக பேசி கடைசியில் அவர் நிலைமை என்ன ஆனது என அனைவருக்குமே தெரியும். சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இந்த நிலையில் வடிவேலுவின் இந்த பேச்சால் ப்ளூசட்டை மாறன் அவருடைய எக்ஸ் தள பக்கத்தில் வடிவேலுவை பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இதோ அவர் கூறியது.

இவர் காமடியாக பேசினால் வாக்குகள் விழும் என நம்பியது திமுக. ஆனால் அப்போது தோல்வியை தழுவியது. சின்னக் கவுண்டர் படத்தில் அரை டஜன் ஆடைகள் மற்றும் பணம் தந்து உதவியவர் கேப்டன். பிறகு பல படங்களில் தன்னுடன் நடிக்க வைத்து வளர்த்து விட்டார் விஜயகாந்த். வீட்டருகே நடந்த சாதாரண பார்க்கிங் பிரச்னையை மனதில் வைத்துக் கொண்டு விஜயகாந்தை குடிகாரர் என மட்டம் தட்டி திமுக மேடையில் விஜயகாந்தை பற்றி தரக்குறைவாகபேசினார் வடிவேலு.

திமுகவின் பிரதான எதிரி ஜெயலலிதாவை விமர்சித்தால் டங்குவார் கிழிந்துவிடும் என்பதால் தனது பர்சனல் பகையை தீர்க்க கேப்டனை மட்டும் வசைபாடினார். ஆனால் இவரை கண்டுகொள்ளாமல்‌ லூஸில் விட்டார் விஜயகாந்த். வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என சொன்னவர் விஜயகாந்த். ஜெயலலிதா முதல்வரான பிறகு அரசியலில் காணாமல் போனார். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது அக்கட்சிக்காக பேசமாட்டார். ஆளுங்கட்சியாக இருந்தால் தேர்தல் நேரத்தில் மட்டும் சுய ஆதாயத்திற்காக திமுக மேடைகளில் தலையை காட்டுவார்.

தன்னை ஒருமையில் பேசி கிண்டல் செய்ததால் ‘ராஜா’ எனும் படத்தோடு இவரை நிரந்தரமாக புறக்கணித்து விட்டார் அஜித். அஜித் ரசிகர்களின் வாக்குகளை பெற விரும்பும் திமுக வடிவேலுவை மேடையேற்றுவது முரண். அன்று ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை. இன்று மோடியையும் எதிர்க்க மாட்டார். திமுகவை அரசியல் எதிரி எனக்கூறும் விஜய்யை எதிர்த்தால் இவரது டப்பா டான்ஸ் ஆடிவிடும். ஆகவே அரண்மனை புலவர் போல முதல்வரை பாராட்டி பேசி பொற்கிழி வாங்குவதோடு சரி.

சினிமாவில் இவரது காமடி எடுபடாமல் போய் பல வருடங்களாகி விட்டது. பிரச்சாரத்தில் எப்படி எடுபடும்? தன்னுடன் பல வருடங்கள் இணைந்து நடித்த துணை நடிகர்கள் பலரின் கஷ்டத்திலும் உதவாத, அவர்களின் இறப்பிற்கும் செல்லாத இவரால் மக்களுக்கு என்ன பயன்? மாமன்னன் படத்தில் நடித்ததோடு இவரது சகவாசத்தை உதயநிதி நிறுத்தியிருக்க வேண்டும். திமுக எனும் கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளியை விட்ட கதைதான் இது. இவரது வாய் ராசியால் மீண்டும் திமுக தோற்றால் அதற்கு திமுகவே பொறுப்பு என கூறியிருக்கிறார் ப்ளூசட்டை மாறன்.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

12 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

12 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

14 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

21 hours ago