Categories: Cinema News latest news

மொத்த படமும் தெறி மாஸ்!. மூணு தடவ பாக்கலாம் செட்டியார்!.. ராயனை பங்கம் செய்த பிரபலம்!..

தனுஷ் இயக்கி நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ராயன். பொல்லாதவன், அசுரன், வட சென்னை, பாட்ஷா என எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒரு திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் தனுஷ். வெற்றிமாறன் படத்திலேயே அதிகம் நடித்ததால் அவரை போலவே மாற முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால், வெற்றிமாறனை போல அழுத்தமாக கதை சொல்ல தெரியவில்லை தனுஷுக்கு. ஏனெனில் அவர் வெற்றிமாறன் இல்லை என்பதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். படம் முழுக்க கத்தியால் ஒருவரை குத்திக்கொண்டே இருந்தால் ரசிகர்களுக்கு பிடித்துவிடும் என நினைத்து இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் தனுஷ்.

படத்தின் மேக்கிங், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஆகியவை நன்றாக இருந்தாலும் கதை என ஒன்றுமில்லை. இதனாலேயே ராயன் படத்தோடு ரசிகர்களால் ஒன்ற முடியவில்லை. ராயன் ஏறக்குறைய ரஜினியின் பாட்ஷா பட டைப் கதைதான். இரண்டு தங்கைகள், ஒரு தம்பியை கரை சேர்க்க ரவுடிசத்தை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டுனராக மாறுகிறார் ரஜினி.

ஆனால், அதே தங்கைக்கு ஒரு பிரச்சனை என்றதும் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறார். இதேதான் ராயனிலும் இருக்கிறது. ராயனில் இரண்டு தங்கைகளுக்கு பதில் இரண்டு தம்பி இருக்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம். இதிலும் அதே தங்கச்சி செண்டிமெண்ட்தான்.

முதல் பாகம் ஓரளவுக்கு போனாலும் ஆழமான கதை இல்லாமல் இரண்டாம் பாகம் தடுமாறுகிறது. எந்த விஷயத்திலும் லாஜிக் இல்லை. ஒரு விஷயம் நடக்கிறது எனில் அதை ஏற்றுக்கொள்ளும் படி செய்ய வேண்டும். அதில்தான் வெற்றி அடங்கி இருக்கிறது. அதுதான் மாறனில் மிஸ்ஸிங்.

இந்நிலையில், யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் டிவிட்டரில் ‘வடசென்னை புதுப்பேட்டையை எல்லாத்தையும் தனுஷ் ஓவர்டேக் பண்ணிட்டாரு செட்டியார். மொத்த படமும் தெறி மாஸ் மூணு தடவ பாக்கலாம்’ என் பதிவிட்டு சதுரங்க வேட்டை பட புகைப்படத்தை போட்டு கலாய்த்திருக்கிறார்.

Published by
ராம் சுதன்