ஜெயம் ரவி சூட்டிங் இடைவேளையில என்ன செஞ்சாருன்னு தெரியுமா? பூமிகா சொல்றதைக் கேளுங்க
பத்ரி படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார். ரோஜாக்கூட்டம் படத்தில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்தார். அத்தனை பேரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.
இந்தப் படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசிகர்களை சுண்டி இழுத்தார். சில்லுன்னு ஒரு காதல் என ஒரு சில படங்களில் நடித்தார். எல்லாமே ஹிட் தான். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ளார்.
நடிகை பூமிகா பிரதர் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஜெயம்ரவிக்கு அக்காவாக நடித்துள்ளார். ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார்.
வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை பூமிகா இப்போது பிரதர் படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா....
எனக்கு ஒரு சகோதரி, 2 சகோதரர்கள் இருக்கிறார்கள். அதுல மூத்த சகோதரர் இருக்கிறார். அடிக்கடி போன்ல பேசிக்கொள்ள மாட்டோம். அவங்க எப்போ பேசுறாங்களோ நானும் பேசுவோம். அப்போ பல விஷயங்களைப் பரிமாறிக்கொள்வோம். இந்தப் படத்திலும் அப்படித்தான் இருக்கிறது.
ஜெயம் ரவி கோபமே பட மாட்டார். ரொம்ப இனிமையானவர். அமைதியானவர். அவர் ஒரு ஜென்டில்மேன். அவருடன் விடிவி கணேஷ் சேர்ந்து ஷாட் இடைவேளையில் செஸ் விளையாடுவாரு. ஜெயம் ரவி தான் சாம்பியன்.
படப்பிடிப்பின்போது அதிகமாக போன் பேச மாட்டார். ரொம்ப அமைதியாக இருப்பார். 90 பர்சன்ட் பசங்க இன்னைக்கு போன்லயே தான் இருக்காங்க. ஆனா ஜெயம் ரவி அப்படி இல்லை. எனக்கு அது ரொம்ப வித்தியாசமாக இருந்தது.
நான் இப்போது வித்தியாசமான கதைகளம், கேரக்டர்கள் கொண்ட படங்களில் நடிக்க விரும்புகிறேன். நான் கொஞ்சம் தான் தமிழ்ப்படங்களில் நடித்துள்ளேன். ரசிகர்கள் இதுமாதிரி படங்களை ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இந்தப்படத்தில் ஜெயம் ரவிக்கு அக்கா கேரக்டரில் நடித்துள்ளேன். தொடர்ந்து அதுபோன்ற அக்கா கேரக்டர்ல நடிப்பேன் என்று சொல்ல முடியாது. அந்தக் கேரக்டரில் நடிக்க ஸ்கோப் இருந்தால் மட்டும் தான் நடிப்பேன். லைப்ல பார்ட்னர் தான் ரொம்ப முக்கியம்.
அவர் தப்பா இருந்தா லைப்பே போயிடும். இருக்குறது ஒரு வாழ்க்கை தான். ஒருவருக்கொருவர் அன்பாகவும், புரிந்துகொள்ளும் விதமாகவும் நடந்தால் வாழ்க்கையில எந்தப் பிரச்சனையும் வராது. படத்தோட ஸ்கிரிப்ட் எனக்குப் பிடிச்சிருந்தா தான் நடிப்பேன். அதனால் பெரிய அளவில் கேப் விழுந்தா எனக்குக் கவலை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.