ட்ரெண்ட்டாகும் #boycottsaipallavi… சிக்கலில் அமரன் திரைப்படம்… கோபத்தில் கமல்ஹாசன்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:32:45  )

VijayTV: நடிகை சாய்பல்லவி தன்னுடைய பேச்சால் தற்போது ட்விட்டரில் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதுகுறித்து விஷயங்களால் தற்போது அமரன் படக்குழு கடுப்பில் இருக்கிறது.

நடிகை சாய் பல்லவி இந்து ரபேக்கா வர்கீஸ் ஆக நடிக்கும் திரைப்படம் அமரன். முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இத்திரைப்படத்தின் ப்ரோமோசனை துவங்குவதற்கு முன்னர் சாய்பல்லவி தேசிய போர் நினைவகம் சென்றார். அது குறித்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில், நான் அமரன் திரைப்படத்தின் ப்ரோமோசனை தூங்குவதற்கு முன்னர் நமக்காக உயிர்விட்ட ஆயிரம் தியாகிகள் வாழும் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தேன்.

மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் விக்ரம் சிங் இருவருக்கும் அஞ்சலி செலுத்தும் போது எமோஷன் ஆக உணர்ந்தேன். சாய் பல்லவியின் இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களில் எக்ஸ் வலைதளத்தில் #boycottsaipallav என்ற ஹாஷ்டேக் வைரலாகி வருகிறது.

இது குறித்து ஆராயும்போது நடிகை சாய்பல்லவி தன்னுடைய வீராத பருவம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பேட்டியின் போது, பாகிஸ்தான் மக்கள் நம்முடைய ஆர்மி அதிகாரிகளை தீவிரவாத குழுவாக தான் பார்ப்பார்கள். ஆனால் நமக்கு அந்த நாட்டு ஆர்மி அது போன்று தோன்றும்.

ஒவ்வொருடைய கண்ணோட்டமும் மாறுபடும். இதற்கு வன்முறை ஏன் என்று தான் புரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் சாய் பல்லவி பேசிய இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. சொந்த நாட்டின் ஆர்மி வீரர்களை கொச்சைப்படுத்தி விட்டு பெருமையாக பேசுவது போல் சாய் பல்லவி நடிப்பதாக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக சாய் பல்லவரின் பதிவுகளில் நெட்டிசன்கள் தங்களுடைய குற்றச்சாட்டுகளை அவர் மீது எய்து வருகின்றனர். அமரன் திரைப்படத்தின் ரிலீஸ் இன்னும் மூன்றே தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென சாய்பல்லவிக்கு எதிராக இந்த நெகட்டிவ் இமேஜ் படத்திற்கு ஏதும் பிரச்சனை ஏற்படுத்துமா என ராஜ்கமல் நிறுவனத்துக்கு தற்போது தலைவலி உருவாகி இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

Next Story