ப்ளடி பெக்கர், பிரதர் படங்களில் கலெக்ஷனை அள்ளியது எந்தப்படம்னு தெரியுமா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:31  )

தீபாவளி ரேஸில் அமரன் படத்துக்கு அடுத்தபடியாக ப்ளடி பெக்கரும், பிரதரும் உள்ளது. இவற்றின் கலெக்ஷன் எப்படின்னு பார்க்கலாமா?

ஜெயம் ரவிக்கு குடும்ப வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகள் வந்து விட்டன. ஆனால் அதையெல்லாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டு அவர் நடித்த படம் பிரதர். தீபாவளிக்கு வெளியாகி உள்ள அவரது படம் பிரதர்.

இந்தப் படமும் குடும்பப் பிரச்சினையை மையமாகக் கொண்டது தான். ஆனால் அதில் கொஞ்சம் நகைச்சுவையைக் கலந்து இயக்கியுள்ளார் எம்.ராஜேஷ். படத்தில் பிரியங்கா மோகன், பூமிகா, விடிவி.கணேஷ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் செம. அதிலும் மக்காமிஷி படுமாஸ்.

ஜெயம் ரவி சொல்ற நிதர்சனமான உண்மை இதுதான்... யார் உங்க மேல அதிகமா கோபப்படுறாங்களோ அதிகமா திட்டுறாங்களோ அவங்க தான் உங்களுக்குத் தேவை. ஏன் திட்டுறாங்கன்னு தெரிஞ்சிக்கணும். புரிஞ்சிக்கணும். உங்கள பாராட்டுறவங்க தேவை கிடையாது என்கிறார். இதெல்லாம் பார்க்கும்போது அவரது அனுபவப்பாடமாகத் தான் இருக்கும் என்று தெரிகிறது.

தீபாவளி கலெக்ஷனில் கவின் நடிக்க இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நடித்த ப்ளடி பெக்கர் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. நகைச்சுவைப் படமாக வந்துள்ளதால் அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்தப் படம் இந்திய அளவில் முதல் நாளில் 2.2 கோடி வரை வசூலித்துள்ளது. 2வது நாளில் முன்கூட்டியே எடுக்கப்பட்ட வசூலின் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி 1.80 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி நடித்த பிரதர்ஸ் படம் முதல்நாளில் 2.5 கோடியும், 2வது நாளில் 2.25 கோடியும் வசூலை ஈட்டியுள்ளது.

ஜெயம் ரவியிடம் 3 கதைகள் உள்ளதாம். முதல் கதைப்படி யோகிபாபு நடிப்பில் படம் இயக்குகிறாராம். அடுத்ததாக 2 படங்கள் கைவசம் உள்ளதாகவும் தயாரிப்பாளர் கிடைத்தால் இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story