ஜெயம் ரவிக்கு அடி மேல் அடி!. கடனில் சிக்கிய பிரதர்!.. தீபாவளிக்கு வெளியாகுமா?!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:50  )

Brother movie: சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வரும் ஜெயம் ரவி சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி அதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து வருகிறார். மும்பையில் அலுவலகம் ஒன்றை அமைத்து அங்கிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டிருக்கிறார்.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற நகைச்சுவை படங்களை கொடுத்த இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் திரைப்படம்தான் பிரதர். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், அக்காவாக பூமிகாவும் நடித்திருக்கிறார்கள்.

அக்கா - தம்பி பாசம் தொடர்பான செண்டிமெண்ட் காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான மக்காமிஷி பாடல் இளசுகளிடம் பெரிய வரவேற்பை பெற்று படத்திற்கே பெரிய புரமோஷனாக மாறிவிட்டது. எனவே, எப்படியும் படம் ஹிட் அடிக்கும் என நம்பி காத்துக்கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர்.

இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தீபாவளியை குறிவைத்து வருகிற 31ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில்தான் கடன் பிரசசனையில் சிக்கி இருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர். இப்படத்திற்கு நெகட்டிவ் ஃபைனான்ஸ் வாங்கியதில் 20 கோடி, ஃபைனான்சியர்களிடம் வாங்கிய 9 கோடி மற்றும் இதற்கு முன் வெளியான படங்களால் ஏற்பட்ட நஷ்டங்களால் வினியோகஸ்தர்களுக்கு கொடுக்க வேண்டிய ஒன்றரை கோடி என மொத்தம் 30 கோடிக்கு மேல் கொடுத்தால் மட்டுமே பிரதர் படம் வெளியாகும் என் சொல்கிறார்கள்.

ஆனால், அந்த அளவுக்கு இன்னும் வியாபாரம் நடக்கவில்லை. எனவே, தமிழ்நாட்டு உரிமையை ஐங்கரன் கருணாமூர்த்தியிடம் கொடுத்துவிட்டனர். ஆனால், அவரோ ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு கைமாற்றி விட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஏனெனில், ரெட் ஜெயண்ட் உள்ளே வந்தால் ரிலீசில் எந்த பிரச்சனையும் இருக்காது.

அதோடு, தியேட்டர்களையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என நினைக்கிறாராம். தீபாவளிக்கு வெளியாகும் அமரன் படத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story