கமலிடம் பிரபலம் கேட்ட நெத்தியடி கேள்வி... முகமே மாறிப்போன உலகநாயகன்...!
அமரன் படம் குறித்தும், அதற்கு முன்னர் ஒரு சமயம் கமலிடம் கேட்ட கேள்வி குறித்தும் பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அமரன் படம் சிவகார்த்திகேயனோட முந்தையப் படங்களை விட பெட்டரா இருந்தது. வழக்கமா அவரோட படங்கள்னாலே கேலி, கிண்டல்னு இருக்கும். ஆனா இந்தப் படத்துல அது எதுவுமே இல்லை. ராணுவ வீரரை மையமாக வைத்து படத்தை நேர்த்தியா எடுத்திருக்காங்க.
இது மனசுல கையை வச்சி சொல்லணும்னா சிவகார்த்திகேயனோட படம் இல்லை. சாய்பல்லவியோட படம். முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் தான் இந்தக் கதையை சொல்லி படக்குழுவினர் எடுத்துள்ளார்கள். அதனால் முழுக்க முழுக்க அவங்களோட பாயிண்ட் ஆப் வியுவுல தான் சொல்லிருப்பாங்க.
சாய்பல்லவியோட கேரக்டர் தான் வெளிவரும். பொதுவாகவே காஷ்மீர் விவகாரத்தைக் கையில் எடுத்தால் அங்குள்ள மக்களைக் குற்றவாளிகளாகத் தான் சித்தரித்து இருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தைப் பொருத்தவரை அந்த மக்களின் நியாயங்களையும் சொல்லி இருப்பார்கள்.
இது காஷ்மீரி பைல்ஸ் மாதிரியான படமாக எடுத்து இருக்கலாம். ஆனால் நேர்மையாக எடுத்துருக்காங்க. ராணுவத்துக்கு இருக்குற சிறப்பு சட்டத்தின்படி யாரை வேணாலும் கைது பண்ணலாம். யாரை வேணாலும் சுட்டுக் கொல்லலாம்னு தான் சொல்வாங்க. ஆனா இந்திய ராணுவம் காஷ்மீரில அப்படி எல்லாம் நடத்துறது இல்லை.
அதே மாதிரி ராணுவம் குறித்த இரு பக்கங்களையும் பதிவு பண்ணிருக்காங்க. படத்துல வலிந்து திணிக்கிற மாதிரி நகைச்சுவை இல்லை. கதையை ஒட்டிய நகைச்சுவை தான் இருக்கு. முதல்வர் பாராட்டியதற்கு பின்னால் அரசியலும் இருக்கும். வியாபாரமும் இருக்கு.
இந்தப்படத்தின் தமிழக தியேட்ரிக்கல்ல ரிலீஸ் பண்ணினதே உதயநிதியோட ரெட்ஜெயன்ட் நிறுவனம் தான். அதனால் அரசியலும், வியாபாரமும் இருக்கு. விஸ்வரூபம் டிரைலர் பத்திரிகையாளர்களுக்குத் தான் முதல்ல போட்டுக்காட்டுனாங்க. அதுல நானும் இருந்தேன். அதைப்பார்க்கும்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான எதிர்ப்பை உமிழ்கிற படம்னு தெரியவந்தது.
அப்போ நான் கமலிடம் கேட்டேன். இது தீவிரவாதிகளுக்கு எதிரான படமா? இஸ்லாமியர்களுக்கு எதிரான படமா? அல்லது இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான படமா? அந்தக் கேள்வியைக் கேட்டவுடனே அவரது முகமே மாறிடுச்சு.
அப்புறம் என்னென்னமோ சொல்லிட்டு பிரஸ்மீட்டை முடிச்சிட்டாரு. நான் கேட்ட இந்தக் கேள்வி தான் மறுநாள் பத்திரிகைகளில் வெளியாகி அந்தப் படத்துக்கே ஒரு மிகப்பெரிய சிக்கலை உருவாக்குனது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.