ஷங்கரை கைகழுவி விட்ட முன்னணி நடிகர்கள்... அடுத்து எந்தக் காயை நகர்த்தப் போறாரு?

by சிவா |
ஷங்கரை கைகழுவி விட்ட முன்னணி நடிகர்கள்... அடுத்து எந்தக் காயை நகர்த்தப் போறாரு?
X

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பழைய மாதிரி வெற்றிப்படம் கொடுக்க முடியாதா? இந்தியன் 2, கேம் சேஞ்சர் பெரிய அளவில் போகல. வேள்பாரியை 1000 கோடி பட்ஜெட்ல எடுக்கப் போறதா சொன்னாங்க. அப்புறம் அது டிராப் ஆனதா என்னன்னு தெரியல. விக்ரம் மகனை வச்சிப் படம் இயக்கப் போறதா சொல்றாங்க. இதுபற்றி நீங்க சொல்றது என்னன்னு பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபுவிடம் ஆங்கர் கேட்கிறார். அதற்கு அவர் சொல்லும் பதில் இதுதான்.

பெரிய நடிகர்கள்: வேள்பாரி 3 பார்ட். அதுல நடிக்கறதுக்கு பெரிய நடிகர்கள் யாரும் தயாரா இல்லை. அவங்க டேட்ஸ் உடனே கொடுக்க மாட்டாங்க. பிராக்டிகலா அதுதான் உண்மை. ஒரு படம் தோல்வி. அடுத்தும் தோல்வின்னா பெரிய நடிகர்கள் கால்ஷீட் கொடுக்க மாட்டாங்க.

ஷங்கரோட நிலைமை: உதாரணத்துக்கு வேள்பாரி படத்துல பெரிய நடிகர்கள் நடிக்கணும். ரஜினி அல்லது சூர்யா மாதிரி இருக்கணும். அதுதான் 1000 கோடி பட்ஜெட், வியாபாரத்துக்குத் தாங்கும். அப்படி பெரிய நடிகர்கள் யாரும் வரலன்னா ஷங்கரோட நிலைமை என்னாகும்?

மூடுவிழா: இன்னொன்னு இன்னைக்கு 1000 கோடி போட்டுப் படம் எடுக்குறதுக்கு எந்தத் தயாரிப்பாளருமே இல்லை. லைகா மாதிரி நிறுவனங்கள் பெரிய படங்களாக எடுத்துக்கிட்டு இருந்தாங்க. அவங்களை எல்லாருமே சேர்ந்து மூடுவிழா பண்ணி வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாங்க.

கேள்விக்குறியில லைகா: விஜயோட பையன் டைரக்ட் பண்ற படம். தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கிறாரு. அந்தப் படமே லைகா தொடங்குவாங்களா இல்லையான்னு கேள்விக்குறியில இருக்கு. அதனால வேள்பாரிக்குத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இல்லை. கண்டிப்பா விக்ரம் பையனை வைத்து பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு.

மாறிப்போன டெம்ப்ளேட்: துருவ் நடிக்கிறதா சொல்றாங்க. பழைய டெம்ப்ளேட்லயே போனதால அது ஓடலை. ஆனா வேள்பாரியைக் கண்டிப்பா வேற லெவல்ல பண்ணுவாரு. இன்னைக்கு ஜெனரேஷன் மாறிட்டாங்க.

பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து, பார்க்கிங் டைரக்டர் ராம்குமார், குட்நைட் இயக்குனர் எல்லாம் வேற வேற கன்டன்ட் கொடுத்தாங்க. அதுதான் ஆடியன்ஸ்சுக்கும் பிடிச்சது. பழைய பார்முலா ஒட்டல. புதுசா யாராவது கொண்டு வந்தா ரசிப்பாங்க. ஷங்கர் தன்னை அப்டேட் பண்ணனும்.

நல்ல படமா கொடுப்பாரு: தன்னோட தப்பை உணர்ந்து புதுசா கொடுக்கணும். துருவ் விக்ரம் படத்துக்குப் பேச்சுவார்த்தையில இருக்கு. அப்படி அவரு நடிச்சி ஷங்கர் பண்ணினாருன்னா நிச்சயமா நல்ல படமா கொடுப்பாரு. தன்னை அப்டேட் பண்ணிக்குவாரு. அதுக்கான நிறைய வாய்ப்புகள் இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story