கமல்ஹாசன் சமீபத்தில் அஜித்தைத் தொடர்ந்து எனக்கு உலகநாயகன் உள்பட எந்த பட்டமும் தேவையில்லை. கமல் என்றோ அல்லது KH என்றோ அழைத்தால் போதும் என்று தெரிவித்து இருந்தார். அப்போது கமலின் தீவிர ரசிகரான ரோபோசங்கர் பேசும்போது, கமலை உலகநாயகன் என்ற ஒரு சிறிய கூண்டுக்குள் அடைக்க விரும்பவில்லை. அவர் விண்வெளி நாயகன்.

உலகிலேயே விண்வெளி நாயகன் என்றால் அவர் ஒருவர்தான். வேறு யாருக்கும் இந்தத் தலைப்பை சொல்லவே முடியாது. இனி அவர் உலகநாயகன் அல்ல. விண்வெளி நாயகன் என்றே குறிப்பிடப்படும். அவரை நாங்கள் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறோம் என்றார்.

அதே போல தக்லைஃப் படத்திலும் ‘விண்வெளி நாயகா’ என பாடலே வந்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் கமலின் மகள் சுருதிஹாசன் பாடிய அந்தப் பாடல் மிகவும் பிரபலமானது. இப்போது எங்கு பார்த்தாலும் கமலுக்கு விண்வெளி நாயகன் பட்டத்தைக் கொடுத்து அப்படித்தான் அழைத்து வருகிறார்கள்.

எந்தப் பட்டமும் தேவையில்லை என்று சொன்ன கமல், இந்தப் பட்டத்துக்கு ஒப்புக்கொண்டது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை படத்திற்காக இருக்கலாம். கமல், மணிரத்னம், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் என பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருப்பது தக் லைஃப் படத்திற்கு கூடுதல் பலம்.

கன்னட மொழியை தமிழில் இருந்து வந்ததுதான் என கமல் பேச அது வெடித்து கர்நாடகாவில் பெரிய பூகம்பமானது. அந்த வகையில் கமலை மன்னிப்பு கேட்க அழுத்தம் தரப்பட்டது. படம் வெளியாகுமா என இருந்த நேரம், இப்போது சுமூக முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது. படம் வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.

அந்த வகையில் உலகெங்கும் நாளை வெளியாக உள்ள தக் லைஃப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. மீடியாக்களில் எங்கு பார்த்தாலும் தக் லைஃப் பற்றிய பேச்சாகத் தான் உள்ளது. மன்னிப்பு கேட்க முடியாது என்று கெத்தாகச் சொன்னதால் ரசிகர்களைத் தாண்டியும் கமல் அனைத்துத் தமிழர்களின் ரசனைக்குரியவர் ஆகி விட்டார்.

இந்த நிலையில் அவருக்கு விண்வெளி நாயகன் பட்டம் பொருத்தமே இல்லை என பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரே ஷாக்காக இருக்கிறதா? என்னன்னு பாருங்க…

தக் லைஃப் படத்தோட புரொமோஷன்களில் எல்லாம் கமலை விண்வெளி நாயகன்னு அழைக்கிறாங்களே. இந்தப் பட்டமாவது அவருக்கு நிலைக்குமா என ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதிலைப் பாருங்க.

நீங்கள் திரும்ப திரும்ப ‘விண்வெளி நாயகா… விண்வெளி நாயகா’ என அழைத்தால் அந்தப் பட்டமும் கமலுக்கு நிலைக்க வாய்ப்பு இருக்கு என்பதில் சந்தேகமில்லை. எனக்கு என்னமோ இந்த விண்வெளி நாயகன் என்கிற பட்டம் கமல்ஹாசனுக்குப் பொருத்தமாக இருப்பதாகத் தெரியவில்லை இவ்வாறு தெரிவித்துள்ளார்.