கமல் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியைப் படித்தது மருதநாயகத்துக்கா? பிரபலம் சொல்லும் தகவல்

Published on: March 18, 2025
---Advertisement---

கமலின் கனவுப்படம் என்று அடிக்கடி சொல்வது அவரது மருதநாயகம் தான். படத்தின் துவக்க விழா, டிரெய்லரோடு நின்று போனது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பொருளாதார தேவை இருந்தது. அதற்கு யாரும் முன்வராததால்தான் அது நின்று போனது. மிகப் பிரம்மாண்டமாக அந்தக் காலத்திலேயே கமல் உருவாக்கி இருந்தார். கமலே இயக்கி நடித்தார்.

கமல்: படத்தின் துவக்க விழாவுக்காக இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தையே சிறப்பு விருந்தினராக அழைத்து வந்த பெருமையும் கமலையேச் சேரும். இந்தப் படத்திற்காக உடலை வருத்தி கமல் நடித்திருப்பது படத்தில் இதுவரை எடுக்கப்பட்ட ஓரிரு காட்சிகளைப் பார்த்தாலே நமக்குத் தெரிந்து விடும்.

எருமை மாட்டு மேல் தாவிக்குதித்து ஏறி சவாரி செய்கிறார். அதே போல படத்தில் பெரிய பாறாங்கல்லைத் தூக்குவதும், அவருடைய நீண்ட முடி மற்றும் காஸடியூமும் பார்ப்பதற்கே பிரமிப்பாக உள்ளது. இந்தப் படம் எப்போது வரும் என்பதே ரசிகர்களின் கனவாகவும் இருந்து வருகிறது.

AI டெக்னாலஜி: இந்த நிலையில் இவருக்கு இப்போது படம் வெளிவர பெரிதும் கைகொடுத்து இருப்பது AI டெக்னாலஜி. இந்த நவீன தொழில்நுட்பத்தால் மறைந்து போனவர்களையே கூட நடிக்க வைக்கலாம். அப்படித்தான் சமீபத்தில் விஜய் நடித்த கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்தும் நடித்து இருந்தார். அதே போல அவர்களின் குரலையும் கொண்டு வர முடியும்.

தமிழ்சினிமாவுக்கு ஏதாவது புதிய தொழில்நுட்பம் வந்தால் அதைப் பற்றித் தௌ;ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் கமல். அதன்படி AI டெக்னாலஜியைப் படிப்பதற்காகவே 6 மாதமாக அமெரிக்காவில் தங்கி இருக்கிறார்.

சரி. ஒருவேளை அவர் படித்து முடித்து திரும்பினால் மருதநாயகம் தயாராகி விடுமா என்று ரசிகர்களுக்கு கேள்வி எழுகிறது. அதுகுறித்து பல சமூகவலைதளங்களிலும் பேசப்பட்டது. கமல் AI படிக்கிறதே மருதநாயகம் படத்துக்காகத்தான்.

இளமையான தோற்றம்: இப்போது இருக்கும் அவரது உடல்வாகுக்கு அந்தப் படத்தை நடிக்க முடியாது. அதனால் AI டெக்னாலஜியில்தான் இளமையான தோற்றத்தையும், சாகசங்களையும் கொண்டு வர முடியும் என்று சொன்னார்கள். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

கமல் அமெரிக்கா செல்வதற்கு முன்பு மருதநாயகம் படததை எடுப்பதற்காக ஏஐ டெக்னாலஜியைப் படிக்கச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போனாரா? அதுமாதிரி கேள்வியை நீங்க கேட்டுருக்கீங்க. அவர் ஏஐ டெக்னாலஜியைப் படிக்கப் போனது உண்மைதான். அந்தப் படிப்பு மருதநாயகம் உருவாக ஒரு காரணமாக அமைந்தால் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment