Categories: Cinema News latest news

குபேரா படத்தை ஓடவிடாம செஞ்சது தனுஷா? ஷாக் கொடுக்கும் பிரபலம்!

சமீபத்தில் வெளியான குபேரா படம் பெரும் எதிர்பார்ப்புடன் தெலுங்குபட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பற்றியும் தனுஷ் மேடையில் பேசியது குறித்தும் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன சொல்றாருன்னு பாருங்க.

பிச்சைக்காரர்கள் பற்றி பாலா நான் கடவுள் படத்தில் எடுத்திருப்பாரு. பிச்சைக்காரன்கற பேருலயே படம் எடுத்துருக்காங்க. அதையும் தாண்டி பிச்சைக்காரர்கள் பற்றி படத்துல என்ன வச்சிருக்கீங்க? பிச்சைக்காரனோட சம்பந்தமா என்ன காட்சி வச்சிருக்கீங்க?

அவங்க வாழ்க்கையில் இருக்குற சிக்கல் என்ன வச்சீங்கன்னா ஒண்ணுமே கிடையாது. பாக்கியராஜ் சாமியார் மாதிரியே இருப்பாரு. சாமியாரா, பிச்சைக்காரனான்னு தெரியாது. ஒரு பிச்சைக்காரன் அடிபட்டுருவான். தனுஷ் போவாரு. திரும்ப வந்து புதைப்பாங்க. பிச்சைக்காரங்கள்லாம் தனியா இருக்கணும். நாய் வண்டியில ஏத்தாதீங்கன்னு பேசுறதுதான் பெரும்பாலும் இருக்கு.

ஒரு காட்சில 10 ஆயிரம் கோடி ரூபாய் போனா போதுன்னு விட்டுட்டுப் போகலாம். 1லட்சம் கோடி கொடுக்குறவன் 10ஆயிரம் கோடியை விட்டுட்டுப் போகலாம். தனுஷாலயும் அவ்ளோ சீக்கிரமாக் கண்டுபிடிச்சி அந்தப் பணத்தை எடுக்க முடியாது. நாலு நாள்ல எப்படி மாறுவான்?

10 ஆயிரம் கோடியை இழக்காம உலகப் பணக்காரர்களில் ஒருவனான ஒரு கோடீஸ்வரன் காரை விட்டு இறங்கி கோயில்ல போய் பிச்சை எடுக்குறான்னா அது அபத்தத்துலயும் அபத்தம். ஒண்ணாம் நம்பர் அபத்தம். கோடீஸ்வரன் போனா ஊடகங்கள் கவனிக்குமா கவனிக்காதா? நவீன யுகத்தில் செல்போனை சுவிட்ச் ஆப் பண்ணினா அதை டிராக் பண்ண முடியாதுன்னு சொன்னது மிகப்பெரிய கோமாளித்தனம்.

இந்தப் படத்துல சரியாகப் பண்ணாதனாலயோ என்னவோ தனுஷ் சுடுதலா பேசிட்டாரு. மேடைகள்ல தனுஷ் மாதிரி சின்ன வயசுல இருக்குறவங்க சம்பந்தம் இல்லாம பேசி ஓட வேண்டிய படத்தையும் ஓட விடாம ஆக்கிறக் கூடாது. இது மற்ற நடிகர்களுக்கப் பாடம். நெகடிவ் விமர்சனத்தாலதான் படம் ஓடலைன்னு சொல்லக்கூடாது.

சீப்பை எடுத்து ஒளிச்சி வச்சிட்டா கல்யாணம் நின்னு போகுமா? விமர்சகர்களைச் சொல்வதை விட்டுவிட்டு உங்க முதுகுல என்ன இருக்குங்கறதைக் கழுவுனா படம் வெற்றி அடையும். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v