நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் போட்டி... எதுல தெரியுமா? பிரபலம் விளாசல்

by sankaran v |
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் போட்டி... எதுல தெரியுமா? பிரபலம் விளாசல்
X

சமீபத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கும் இடையில் ட்ரோல்ல சிக்கினதுக்கு அவார்டு கொடுக்கணும்னா இரண்டு பேருக்குமே கடும் போட்டி நடக்கும். முடிவு என்னாகும்னு பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சொல்கிறார் பார்க்கலாமா...

நயன்தாரா, விக்னேஷ்சிவன் ரெண்டு பேருக்கும் ஏதாவது ஒண்ணு பண்ணிக்கிட்டே இருக்கணும். நைட் படுத்து காலைல எந்திரிச்ச உடனே காபி சாப்பிட்டுக்கிட்டு டிஸ்கஷ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. நயன் இன்னைக்கு என்ன பண்ணலாம்னு ஷிவன் கேட்பாரு. ஷிவன் இப்படி போயிறலாமான்னு நயன் கேட்பாங்க. இல்ல இத விட பெட்டரா பண்ணலாமேன்னு கன்டன்ட் ரெடி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அது வந்து போதை கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

கன்டன்ட்ட படத்துல பண்ணிருந்தா தான் படம் ஓடிருக்குமேன்னு ஆங்கர் கேட்க, படத்துல ரெடி பண்ணிருந்தா நல்லா ஓடும். ஆனா படத்துல கன்டன்ட் கொடுக்க முடியலங்கறதுதானே விஷயம். காத்துவாக்குல ரெண்டு காதல்னு கொடுத்தாரு. அதுக்கு அப்புறம் பெரிசா வரலயே. லவ்டுடே ஹீரோவை வச்சி படம் பண்ணிக்கிட்டு இருக்காரு. அது வரட்டுமே என்ன கொடுக்காருன்னு பார்க்கலாம்.

மார்க்கெட் டல்: நயன்தாராவுக்கும் மார்க்கெட் டல்லாக ஆரம்பிச்சிடுச்சு. இத்தனை நாள் விசில் அடிச்சி பார்த்தாங்களே ஆடியன்ஸ். இப்ப அப்படி பார்க்கறது இல்லையேன்னு ஒரு கிரேஸ் குறைய ஆரம்பிச்சிடுச்சு. மமிதா பைஜூ எல்லாம் வந்ததுக்கு அப்புறம் கொஞ்சம் மார்க்கெட் குறைஞ்சிடுச்சு.

அது ஒரு ஸ்டேஜ் வரத்தானே செய்யும். எல்லாருக்கும் ஒரு செட்டில்மெண்ட் ஸ்டேஜ் வரும். அதேமாதிரி நயனுக்கும் வர ஆரம்பிச்சிடுச்சு. வயசும் 40 பிளஸ். அடுத்து என்ன வரும்னுதான் ஆடியன்ஸ் பார்க்குறாங்க.

புகழ்போதை: இது ஒரு நோய் மாதிரி. குரங்கு கோயில்ல என்ன ஆட்டம்போடும். அங்க இங்க தாவும். தேங்காயைப் பிடுங்கிட்டுப் போகும். அது கள்ளு குடிச்சிடுச்சு. அது பத்தாதுக்கு தேள் ஒண்ணு கொட்டிடுதுன்னு கிராமத்துல சொல்வாங்க. அந்த அளவுக்கு அட்டகாசம் பண்ணி போற வர்றவங்கள எல்லாம் பிராண்டி விட்டுடும். அந்தளவுக்கு நயன்தாரா இப்போ புகழ்போதைக்கு அடிமையாகிட்டாங்க. அதனால ஏதாவது ஒண்ணு பண்ணிக்கிட்டு இருக்காங்க.

99 மார்க்: சமீபத்துல அதிகளவு ட்ரோல் ஆகிட்டு வர்றது இந்த நயன், விக்னேஷ் சிவன் ஜோடிதான். இதுக்கு அவார்டு கொடுக்குறாங்கன்னா யார் அதிகமா ட்ரோல்ல சிக்குனதுன்னு அவார்டு கொடுத்தா நயன், விக்னேஷ் இருவருக்கும் போட்டி வந்துடும். அதனால ரெண்டு பேரும் சமமான மார்க் வாங்க ஆரம்பிச்சிடுவாங்க. நயனுக்கு 99 மார்க் கொடுத்தா விக்னேஷ் சிவனுக்கும் 99 கொடுக்கணும்.

ட்ரோல்ல அவார்டு: இருவருக்கும் சமமான மார்க் எடுத்ததால இரண்டு பேருக்கும் அவார்டு கொடுக்கணும். அதாவது அவார்டை நடிச்சி வாங்குவாங்க. இவரு டைரக்ட் பண்ணி வாங்கலாம். ஆனா ட்ரோல்ல சிக்கி அவார்டு வாங்கப் போறவங்களா மாறப்போறாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story