ரஜினி, அட்லி காம்போவில் பிரம்மாண்ட படம்? அதுக்கான பின்னணி பலமா இருக்கே... பிரபலம் சொல்லும் அப்டேட்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெய்லர் 2, கூலின்னு அடுத்தடுத்து பெரிய பெரிய பேனர் படங்களில் நடித்து வருகிறார். ஷாருக்கை வைத்து ஜவான் என்று பெரிய ஹிட் கொடுத்தார் அட்லி. தற்போது அவரது தரப்பில் இருந்து ரஜினியை வைத்து படம் இயக்குவதாக தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் சபையர் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.
ஜவான்: அட்லியைப் பொருத்த வரைக்கும் மாஸ் ஹீரோவை எப்படி பயன்படுத்தணும்னு தெரிந்தவர். எந்த சீன் வச்சா ரசிகர்களுக்குப் பிடிக்கும்னு கரெக்டா பல்ஸ் பார்த்து எடுப்பவர். அட்லியின் வளர்ச்சி இந்தியில் பெரிய ஹீரோவான ஷாருக்கானையே வைத்து இயக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. ஜவான் படத்தை எல்லாம் இந்தியில் கொண்டாடி தீர்த்து விட்டார்கள்.
பெரிய கலெக்ஷன்: அந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை சென்னையில், மகாபலிபுரத்தில் எடுத்தார்கள். ஜூன்ல ஜெய்லர் 2 ஆரம்பிக்கப் போறாங்க. 2026ல தான் அடுத்த புராஜெக்ட் இருக்கும். முதல் கட்ட பேச்சுவார்த்தைல ரசிகர்களே ரஜினியுடன் அட்லி இணைந்து பணியாற்றணும்னு ஆசைப்படுறாங்க. இது நல்ல காம்போ. ஒருவேளை இது நடந்தா மாஸான படமா இருக்கும்.
பெரிய வரவேற்பு: கூலிக்கும், ஜெய்லர் 2க்கும் பெரிய வரவேற்பு, எதிர்பார்ப்பு இருக்கு. சின்ன கிளிம்ப்ஸ் வந்தா கூட ரசிகர்கள் பரபரக்கிறாங்க. 74வயசுக்கு மேல நடிச்சாலும் அவ்ளோ மாஸ் இருக்கு. ஏதாவது ஒரு மேஜிக் சினிமாவுல பண்ணிக்கிட்டே இருக்காரு.
அக்ரீமெண்ட்: அட்லிக்கு ரஜினியை வைத்து இயக்க ஆசை இருக்கு. அதுக்கான முயற்சி பண்றாரு. சன் பிக்சர்ஸ்சுக்கு அட்லி ஒரு படம் பண்றாரு. அதுக்கு ஒரு அக்ரீமெண்ட் இருக்கு. ரஜினியும் அந்த நிறுவனத்துக்கு நெருக்கமா இருக்குறாரு.
அண்ணாத்தே படம் உச்சக்கட்ட கொரோனா டைம்ல வந்தது. அப்போ சன் பிக்சர்ஸ் ரஜினியை நல்லா கவனிச்சிக்கிட்டாங்க. அதனால தொடர்ந்து படங்கள் அந்த நிறுவனத்துக்குக் கொடுக்குறாரு.
நல்ல லாபம்: கூலி படத்துக்கு ஓடிடியே பெரிய ஓபனிங்கைக் கொடுத்துருக்கு. அது உறுதியா நல்ல லாபத்தைக் கொடுக்கும். அட்லி, ரஜினி காம்போ சேர்ந்தா அது பெரிய புராஜெக்டா வரும். அது நடக்குமா என்பதுதான் பெரிய கேள்விக்குறி. ஆனா இருவருக்கும் டேட் சன்பிக்சர்ஸ்ல இருக்கு.
கூலி படத்துக்கு அநேகமா அடுத்த மாதத்துக்குள்ள சூட்டிங் முடிஞ்சிடும். லோகேஷ் கனகராஜோட இயக்கம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. படம் நிச்சயமா பெரிய ஹிட்டாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.