சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படப்பிடிப்பில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இடையில் அவருக்கு செயற்கை மழையில் நனைய விட்டதால் உடல் நிலை சரியில்லாமல் போனது. சிகிச்சைக்காக சென்னை சென்றார். அதன்பிறகு சூட்டிங்கில் கலந்து கொண்டார்.
திடீரென அடிவயிற்றில் பிரச்சனை என சென்னை வந்து அப்போலோவில் சிகிச்சை எடுத்தார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வகையான கருத்துகள் உலா வந்தன. லோகேஷ் தான் காரணமா என்றெல்லாம் அதில் அலசப்பட்டன. ஆனால் அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை.
பீதியைக் கிளப்பாதீங்க. ரஜினி சாரை நாங்க நல்லா பார்த்துக்கிட்டோம். படப்பிடிப்பில் அவருக்கு என்ன தேவை என்பதை நல்லாவே கவனிச்சோம். 40 நாளைக்கு முன்னாடியே சென்னைல ஒரு சின்ன சிகிச்சை எடுக்கப் போறதோ எங்கக்கிட்ட ரஜினி சொல்லியிருந்தாரு.
உங்களுக்கு ஏதாவது சந்தேகம்னா என்னைக் கேளுங்க. அல்லது தயாரிப்பு நிறுவனத்தைக் கேளுங்க. அதை விட்டுட்டு ஏதோதோ பேசி பீதியைக் கிளப்பாதீங்கன்னு ஒரு வீடியோவில் லோகேஷ் பேசி இருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் வலைப்பேச்சு அந்தனன் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் ரஜினி 40 நாளைக்கு முன்னாடியே சொல்லி இருந்தா அவசரம் அவசரமா அதிகாலைல 3 மணிக்கு ஏன் ஆஸ்பத்திரிக்குப் போய் அட்மிட் ஆகணும். படப்பிடிப்பில் வழக்கத்துக்கு மாறாக நடத்துனதால் தான் நாங்க சொல்லியிருக்கோம். லோகேஷ் மொத்தப் பழியும் நம்ம தலையில விழுந்துடக்கூடாதுன்னு விளக்கம் கொடுத்துருக்காரு.
அவரை மழையில் நனைய வைத்து ஒரு பைட்டு எடுத்தாங்கன்னு சொல்லியிருக்கோம். அதுதான் அவரோட உடல்நிலை சரியில்லாம போக ஆரம்பக் கட்டக் காரணம். அப்படி எடுக்கலைன்னு அவர் சொன்னாரா? அப்படி ஒரு காட்சியே எடுக்கலைன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்.
மழையில் நனைய வைத்தது உண்மை. அதன்பிறகு தான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ரஜினிக்கு அடிவயிற்றில் பல்ஜி இருக்குறது தெரிந்து தான் அவர் சிகிச்சைக்குப் போறாரு. ரஜினி ரசிகர்கள் மத்தியில் ரஜினிக்கு மருத்துவசிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் இன்னொரு மருத்துவருக்கு அதைச் சொல்ற ஆடியோ சுற்றிக்கிட்டு இருக்கு. அதை நான் வெளியிடல.
நாகரிகமும் அல்ல. அதுல படப்பிடிப்பின் காரணமாகத் தான் இந்தப் பிரச்சனை வந்ததுன்னே சொல்றாரு. லோகேஷ் கேட்டா கொடுக்குறேன். ஏன் சொல்ல வர்றேன்னா இந்த மாதிரி தலைகீழா கட்டி வச்சி ரஜினியை நடிக்க வைக்கல. மழையில நனைய வச்சி பைட் சீன் எடுக்கலன்னு லோகேஷ் சொன்னா அது கனெக்ட் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…