Cinema News
சினிமாங்கற கனவே SKவுக்குக் கொஞ்சம் கூட கிடையாதாம்… பிரபலம் சொல்லும் ஆச்சரிய தகவல்
சினிமா ஆசை இல்லன்னு சொன்னவரா இப்போ இப்படி கலக்குறாரு…?!
‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர். அப்போது தான் சிவகார்த்திகேயனும் சின்னத்திரையில் பிரபலமானார். இதுகுறித்து ரோபோசங்கர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
சிவகார்த்திகேயனோட வளர்ச்சிக்கு காரணமே அவரோட கடின உழைப்பு தான். கலக்கப்போவது யாரு சீசன் 3ல அவரு எலிமினேட் ஆகி வெளியே போயிட்டாரு. அதுக்கு அப்புறம் ‘பைனலுக்கு 6 பேர் தேவை. ஆனா 5 பேர் தான் இருக்கோம். 6 பேரு வேணுமேன்னு சிவான்னு ஒருத்தன் வந்தானே.
சாலமன் பாப்பையா, எஸ்.ஜே.சூர்யா மாதிரி எல்லாம் பேசினாரு. அவரைப் போடலாமே… சும்மா ஒரு கன்டஸ்டன்ட்தானே’ன்னு போட்டோம். ஆனா அவரு பைனல்ல ஜெயிச்சிட்டாரு.
அப்புறம் ‘ஜோடி நம்பர் ஒன்’ வந்து ஆங்கர் ஆனாரு. டான்ஸ் ஷோ வந்தாரு. எல்லாமே அவரோட கடின உழைப்பு தான். இப்பவும் அண்ணன்கற மரியாதையோட பேசுவாரு.
திருச்சில அவர் படிச்ச ஜேஜே காலேஜ்க்குக் கெஸ்டா போயிருக்கேன். அப்போ என்னைப் பார்த்து நல்லா கவனிச்சாரு. ‘அண்ணே நான் மிமிக்ரிலாம் பண்ணுவேன்ணேன். இப்போ பைனல் வந்துருக்கேன். 3வது சீசன்ல கூப்பிட்டுருக்காங்க.
சாலமன் பாப்பையா மாதிரி பேசுவேன். எஸ்.ஜே.சூர்யா மாதிரி பேசுவேன் அண்ணே’ன்னு சொன்னாரு. ‘கண்டிப்பா வாங்க. நல்லா பண்றீங்க. நிச்சயமா வின் பண்ணுவீங்க’ன்னு சொன்னேன். நான் தான் முதன்முதலா அவரை ஊக்கப்படுத்தினேன்.
இப்போ கூட சொல்வாரு. ‘அண்ணே ஒரு வேலையைப் பார்த்துட்டுப் போனாரு. அதுக்கு அப்புறம்தான் உள்ளே வந்தேன்’. அப்போ அவருக்கு சினிமாவைப் பத்தின கனவே இல்லை. அம்மா மிமிக்ரி எல்லாம் வேணாம். அதெல்லாம் எதுக்கு?
இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா யாரு பார்க்குறதுன்னு கேட்டாங்க. ஆனா அவரு அடுத்தடுத்த கட்டத்துக்குப் போயி ஜெயிச்சாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உலகநாயகன் கமல் தயாரித்த சூப்பர்ஹிட் படம் அமரன். இப்போது தீபாவளி தினத்தில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.