சிவகார்த்திகேயன் படத்துக்கு பராசக்தி தலைப்பு கொடுத்தது சரியா? பிரபலம் கொடுக்கும் ஐடியா

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு பராசக்தின்னு பேரு வச்சிருக்காங்க. இது சிவாஜி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இரு தயாரிப்பாளர்கள் விவாதம் பண்றாங்க. வாங்க பார்க்கலாம்.
பராசக்தி: சிவாஜியோட அறிமுகப்படம் பராசக்தி. அது அவருக்கு ஒரு ஐகானிக் படம். அதனால அந்தத் தலைப்பை வேற படத்துக்கு வைக்கக்கூடாதுன்னு ரசிகர்கள் எல்லாரும் கொதிச்சிட்டாங்க. அந்தப் பேரை வைக்கக்கூடாதுங்கறதுல உறுதியா இருக்காங்க.
எனக்கும் அதுதான் தோணுதுன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் சொல்கிறார். அதற்கு அவர் என்ன சொல்றாருன்னு பாருங்க.
கூகுள் சர்ச்: உங்க கருத்துக்கு நான் உடன்படுறேன். கூகுள்ல போய் பராசக்தின்னு போட்டா சிவாஜி வருவார். வீரபாண்டிய கட்டபொம்மன் போட்டா அதுதான் வந்து நிக்கும். நீங்க இன்னொரு பராசக்தின்னு போட்டா சிவகார்த்திகேயன் வந்து நிப்பாரு.
எம்ஜிஆரின் படங்கள்: சுதா கொங்கரா படம்னு வரும். கூகுள் அப்படியே சிவகார்த்திகேயனைக் கொண்டு வரும். அதனால பராசக்தி அகெய்ன், பராசக்தி ரிட்டர்ன்ஸ்னு போடலாம். அதனால ஒரிஜினல் பராசக்தி மறந்து போகும். இப்படிப் பல படங்களுக்கு நடந்துருக்கு. எம்ஜிஆரின் நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன் படங்களைச் சொல்லலாம்.
விக்ரம்: அதே நடிகர் நடிச்சா பிரச்சனை இல்லை. விக்ரம்னு கமல் சார் கொண்டு வந்தாருன்னா அதுல அவருதான் நடிச்சிருந்தாரு. அது அவருக்கான பிரச்சனையே கிடையாது. சிவாஜி நடிச்சி ஐகானிக் படமா இருக்குற டைட்டிலை நீங்க வைக்கும்போது அது மறக்கப்படும். ஏற்கனவே டிசைடு பண்ணி என்ஓசி வாங்கிருக்காங்க.
நாம ஏன் மறக்கணும்?: 1960 கதையை பிரமாதமா எடுக்கும்போது வேறொரு டைட்டிலை வைக்கலாமே. ஏன் சிவாஜியோட பராசக்தியை மறக்கடிக்கப் பார்க்குறீங்க? பராசக்தின்ன உடனே சிவாஜியோட வசனம்தான் நினைவுக்கு வருது. அதை ஏன் நாம மறக்கணும். இந்தக் கேள்விதான் எனக்கும் வருது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.