தமிழ்சினிமா உலகின் காமெடி நடிகர்களைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…
விவேக்: ரன் படத்துல காக்கா பிரியாணி, சாக்கடை கூவம் நாத்தம் நாறுதுன்னு சொல்லி காமெடி அடிப்பாரு விவேக். அவரு வேற ரூட். சின்னக்கலைவாணர்னு சொல்வாங்க. வடிவேலு பாடிலாங்குவேஜ்லயே காமெடியைக் கொண்டு போவாரு.
சந்தானம், சூரி: கவுண்டமணிக்கு டயலாக் பேசுறதுதான் காமெடி. செந்திலை உதைக்கிறது அப்படியே திட்டுறதுன்னு கொண்டு போவாரு. சந்தானம் கவுண்டர் கொடுத்து காமெடி அடிக்கிறவரு. அது தனி ரூட். சூரிக்கு பெரிசா காமெடின்னு சொல்ல முடியாது. பரோட்டா சாப்பிறது தான். அது கூட பெரிய அளவில் சொல்ல முடியாது.
யோகிபாபு: வடிவேலு மாதிரி காமெடி நடிகர்கள் அந்தக் காலத்துல நிறைய பேரு இருந்தாங்க. சுருளிராஜன், தேங்காய்சீனிவாசன்னு சொல்வாங்க. எம்.ஆர்.ராதா வந்து அப்படி டயலாக் பேசுவாரு. கிளாப்ஸ் வாங்கிட்டுப் போய்க்கிட்டே இருப்பாரு. எல்லாமே பொருளா, கருத்தா, அட்டாக் பண்ணியும் பேசுவாரு.
ஆயிரம் பொருள் இருக்கும். சிரிக்கவும் செய்யலாம். இந்த அட்ராசிட்டி என்பது வடிவேலு மட்டும் பண்ணல. எல்லா நடிகர்களும் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. யோகிபாபுவைப் பொருத்த வரை அவர் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரிக்கல.
பீல்டுல வெற்றிடம்: அவரு கூட செட்ல வந்து நான் நடிக்கிறதுதான் காமெடி. இன்டஸ்ட்ரில என்னை விட்டா காமெடிக்கு ஆளு இல்லங்கறாரு. ஏன்னா பீல்டுல வெற்றிடம் ஆகிப்போச்சு. எந்தக் காமெடி நடிகரும் ஹீரோவா மாறி தொடர்ந்து வெற்றிகரமா இருந்தது இல்லை.
சந்தானம், வடிவேலு, யோகிபாபு, சூரி என எல்லாரும் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. சந்தானம் ஹீரோவா நடிச்சி படம் ஓடுது. ஆனால் அதுல ஸ்திரத்தன்மை இருக்கா?
நாலு மணி நேரம்: நல்ல காமெடி நடிகர்கள் ஒரு ஸ்டேஜ்க்கு மேல ஹீரோ ஆசை வந்து தன்னோட ஒரிஜினாலிடியை இழந்துடறாங்க. 10லட்சத்தை வாங்கிட்டு வடிவேலு நடிக்க வர்றது 12.30 மணிக்கு. வந்தா ஒரு மணிக்கு பிரேக். சீன் மட்டும் அசெம்பிள் பண்ணுவாரு. பிரேக்ல கேரவன் போறது. சாப்பிடுறது. தூங்கறது. 3 மணிக்கு வருவாங்க.
அப்புறம் ஒன்றரை மணி நேரத்துல என்ன எடுப்பீங்க? 8மணி நேரம் நடிக்கிறதுக்கு 10 லட்சம் வாங்கிட்டு நாலு மணி நேரம் நடிக்கலாமா? தயாரிப்பாளர் என்ன பண்ணுவாரு? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…