எஸ்டிஆர் (STR)என்று அழைக்கப்படும் சிம்புவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநாடு படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனால் உற்சாகத்துடன் இன்னொரு முறை வலம் வருவார் என்று எதிர்பார்த்த வேளையில் வெந்து தணிந்தது காடுன்னு கௌதம் மேனன் இயக்கத்தில் படம் நடித்தார்.
அது அட்டர் பிளாப் ஆனது. அதன்பிறகு நீண்ட கேப். தொடர்ந்து கமலுடன் தக் லைஃப்ல இணைந்தார். மணிரத்னம் இயக்கம் என பெரிய ரேஞ்சுக்குப் போனார். அதன்பிறகு இப்போது மீண்டும் பிசியாகி விட்டார். இவரைப் பற்றி வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க…
கெட்ட பழக்கங்கள்: சிம்புவுக்கு அவரை அறியாமலேயே சில கெட்ட பழக்கங்கள் இருந்துச்சு. எல்லாத்தையுமே நிறுத்திட்டு ரசிகனுக்காக புது சிம்புவா மாறிருக்காரு. எது பின்னோக்கி இழுக்குதோ அதை உதறித் தள்ளணும். அதை அவர் உதறித் தள்ள முடியாம கஷ்டப்பட்ட காலங்கள் இருந்துச்சு. இன்னைக்கு அங்கே இருந்து வெளியே வந்துட்டாரு.
தக்லைஃப்: நாம உண்டு. நம்மோட படம் உண்டு. நம்மோட வெற்றி உண்டுங்கற அளவுக்கு முடிவு எடுத்துருக்காரு. அதனால சிம்புவால ஜெயிக்க முடியுமா? பழைய இடத்தைப் பிடிக்க முடியுமாங்கற கேள்விகளுக்கு இடமே வேண்டாம். தக்லைஃப் படத்துல எந்த சிக்கலும் இல்லாம நடிச்சிக் கொடுத்தாரு. அது மணிரத்னம் படம்.
இளம் இயக்குனர்கள்: அதனாலதான் அவர் அப்படி ஒத்துழைப்பு கொடுத்தாருன்னு சொல்லப்பட்டாலும் இன்னைக்கு பார்க்கிங் டைரக்டர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து மாதிரி இளம் இயக்குனர்கள் தேடி வராங்க. இதெல்லாம் பார்க்கும்போது சிம்பு புது உத்வேகத்துடன் வந்துருக்காருன்னே சொல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
3 படங்கள்: சிம்புவும் இந்த ஆண்டு முதல் வருடத்திற்கு 2 அல்லது 3 படங்கள் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளாராம். சிம்புவுக்கும், கமலுக்கும் தக் லைஃப் படத்தில் நல்ல கெமிஸ்ட்ரி. சிம்புவுக்காக கமல் கோட் தைத்துக் கொடுத்துள்ளாராம். அந்த அளவு கமலுக்கு அவர் மீது ஒரு பாசம் என்றும் சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…