இன்று ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரான கூலி திரைப்படத்தின் டிரைலர் வெளியாக இருக்கின்றது. இதன் பரபரப்பு ஒரு பக்கம் இருக்க நேற்று இந்த படத்திற்கு சென்சார் போர்டு ஏ சர்டிபிகேட் சான்றிதழை அளித்து இருக்கிறார்கள். ஏன் இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் என்பதுதான் பலபேருடைய கேள்வியாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 18 வயதிற்கு உட்பட்டவர்களை பார்ப்பதற்கு திரையரங்கம் அனுமதிக்காது என்பது தான் இதன் பொருள்.
ரஜினியின் படங்கள் இன்று பாக்ஸ் ஆபிஸில் கலக்குகிறது என்றால் அதற்கு 18 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் கூட்டமும் ஒரு காரணம். ஆனால் சென்சார் போர்டு ஏ சர்டிபிகேட் கொடுத்ததன் மூலம் அவர்கள் யாரும் இந்த படத்தை திரையரங்கில் வந்து பார்க்க முடியாத வகையில் இந்த சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த படத்தின் வியாபாரம் மொத்தமாக பாதிக்கும் என்பதுதான் பல பேரின் வருத்தமாகவும் இருக்கிறது.
நம்முடைய ஊர்களில் கூட சிங்கிள் ஸ்கிரீன்களில் ஒரு சில திரையரங்கம் 18 வயதிற்கு உட்பட்டவர்களை உள்ளே அனுமதிப்பார்கள். ஆனால் வெளிநாடுகளை பொறுத்த வரைக்கும் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்கள். ஏனெனில் அவர்களுடைய செயலியில் டிக்கெட் புக் செய்யும் போதே சில ஆப்ஷன்களை கேட்கும்.ஏ சர்டிபிகேட் திரைப்படம், 18 வயதிற்கு உட்பட்டவரா என்ற ஒரு ஆப்ஷனை கேட்கும்.
18 வயதிற்கு உட்பட்டவர்கள் எனில் டிக்கெட்டை புக் செய்ய முடியாது. அதைப்போல கல்ஃப் நாடுகளில் வன்முறை காட்சி ஆபாசமான வசனம் ஆபாசமான காட்சிகள் இருந்தால் தூக்கி ஓரமாக வைத்து விடுவார்கள். இதற்கு முன்பு நம்முடைய தமிழ் படங்கள் சிலவற்றை அவர்கள் தடை செய்து இருக்கிறார்கள். ரீ சென்சார் செய்து அந்த படங்களை அங்கு ஓட்டி இருக்கிறார்கள். யுகே நாடுகளிலும் இந்த மாதிரி பிரச்சனை இருக்கிறது.
அப்படி இருக்கும் பொழுது கூலி திரைப்படம் எவ்வளவு ஒரு பெரிய பட்ஜெட்டில் உருவாக்கியிருப்பார்கள்? எவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் அந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்? இந்தியாவின் மிகச் சிறந்த முக்கியமான நடிகர்கள் ஒவ்வொருவருக்குமே இந்த படத்தில் ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி இதை தடுத்திருக்கலாமே?
அவர்கள் சொன்ன காட்சியை வெட்டி இருக்கலாமே? ஏன் இதில் வீம்பு பிடித்தார் லோகி? இது எல்லாருக்குமே ஒரு மன வருத்தம் தான் .இதையெல்லாம் மீறி அதனுடைய ட்ரெய்லர் எப்படி இருக்கும் என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…