இப்படி ஒரு கேள்வியா? இருந்தாலும் பதில் சொன்ன அஜித்.. வெங்கட் பட் சொன்ன சீக்ரெட்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:19  )

தமிழ் சினிமாவில் அஜித் ஒரு மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வரும் அஜித் அந்த படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக கலந்து கொண்டு வருகிறார். ஏற்கனவே அவரின் நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறது.

படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அவருடைய பேஷனான ரேஸிலும் கலந்து கொண்டு வருகிறார் அஜித். துபாயில் நடக்க போகும் சாம்பியன் கார் ரேஸில் அவர் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.

சமீபத்தில் கூட திரும்பவும் அவர் கார் ரேஸில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என அவரது காதல் மனைவியான ஷாலினி அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தது மிகவும் வைரலானது. அஜித்தை பற்றி பல பேர் பல விதங்களில் அவரவர் அனுபவங்களை கூறி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

அதையெல்லாம் பார்ப்பதற்கு அஜித் ரசிகர்களுக்கு ஒருவித சந்தோஷம். ஏனென்றால் அஜித்தை நேரடியாக பார்க்க முடியவில்லை. அவரிடம் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்க முடியவில்லை. அவருடன் கலந்து உரையாட முடியவில்லை. ஆனால் அவரைப் பற்றி ஏதாவது ஒரு வகையில் செய்திகள் வெளி வந்தால் அதுவே போதும் என்ற எண்ணத்தில் தான் அஜித் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல சமையல் நிபுணரான வெங்கட் பட் அஜித்தை பற்றிய கூறிய ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வெங்கட் பட் ஒரு ஹோட்டலில் செஃபாக இருந்தபோது அந்த ஹோட்டலுக்கு அஜித் சாப்பிட வந்தாராம். உடன் அவர் நண்பர்களும் இருந்தார்களாம்.

அப்போது வெங்கட் பட் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அஜித்திடம் நீங்கள் எப்படி ஷாலினியை காதலித்தீர்கள் என்ற ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். இதே கேள்வியை வேறொரு நடிகரிடம் கேட்டிருந்தால் கண்டிப்பாக உன் வேலையை பார்த்துட்டு போ என்று தான் சொல்லி இருப்பார்கள். ஆனால் அஜித் காதலிக்கும் போது நடந்த சில சுவாரசியமான விஷயங்களை வெங்கட் பட்டிடம் விளக்கமாக கூறினாராம்.

மேலும் ஷாலினியை நான்தான் விரும்பி விரும்பி போய் காதலித்தேன் என்றும் கூறினாராம் அஜித். இப்படி யாரும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். அந்த வகையில் அஜித் ஒரு நேர்மையான மனிதர் என வெங்கட் கூறினார் .இந்த சம்பவம் நடந்து சில வருடங்கள் கழித்து அதாவது சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அஜித்தை பார்க்க கூடிய வாய்ப்பு வெங்கட் பட்டிற்க்கு கிடைத்திருக்கிறது.

முதலில் ஷாலினி தான் வெங்கட் பட்டை பார்த்து ஹாய் செஃப் சார் என்று அழைத்திருக்கிறார். அதன் பிறகு கொஞ்சம் காத்திருங்கள் அஜித்தும் உள்ளே இருக்கிறார் வந்துவிடுவார் என ஷாலினி சொல்ல அஜித் வரும்வரை வெங்கட் பட் அங்கு இருந்தாராம்.

வெங்கட் பட்டை பார்த்ததும் அஜித் ஹாய் சார் எப்படி இருக்கீங்க என கேட்டாராம். உடனே வெங்கட் பட் என்னை ஞாபகம் இருக்கிறதா என கேட்டிருக்கிறார். அதற்கு அஜித் முன்பு நடந்த சம்பவத்தை எல்லாம் கூறி ஞாபகப்படுத்திக் கொண்டாராம். இதை பார்த்ததும் வெங்கட் பட்டிற்க்கு ஒரே அதிர்ச்சி. எப்படி மறக்காமல் ஞாபகம் வைத்திருந்தார் என வெங்கட் பட் நினைத்துக் கொண்டே இருந்தாராம். அந்த அளவுக்கு ஒரு நல்ல குணம் படைத்தவர். நேர்மையான மனிதர் அஜித் என சமீபத்திய ஒரு பேட்டியில் வெங்கட் பட் கூறியிருக்கிறார்.

Next Story