ரொம்ப டச்சிங்கா இருந்தது... கண்ணு கலங்கிடுச்சு... அமரன் படம் குறித்து மு.க ஸ்டாலின் விமர்சனம்..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:31:11  )

தீபாவளி பண்டிகையான இன்று தமிழ் சினிமாவை சேர்ந்த 3 திரைப்படங்கள் ரிலீஸாகி இருக்கின்றது. அதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கி இருக்கும் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் தன்னுடைய இளம் வயதில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்திருக்கின்றார்.

அவரின் வாழ்க்கை வரலாற்றை மக்களுக்கு சொல்லும் படமாக ராஜ்குமார் பெரியசாமி அமரன் திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. இந்த திரைப்படத்தில் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கின்றார்.

மேலும் அவரின் மனைவியாக சாய்பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக இன்று திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரிலீஸாகி இருக்கின்றது. நம் நாட்டிற்காக உயர் தியாகம் செய்த ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்திருக்கிறார்கள் என்பதற்காக ரசிகர்கள் பலரும் திரையரங்குக்கு படையெடுத்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தை பார்த்த மக்கள் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். படம் ப்ரீ ரிலீஸிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை செய்த நிலையில் இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் கெரியரில் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று பலரும் கூறி வருகிறார்கள். மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை கொடுக்கும் என்று தெரிவித்து வருகிறார்கள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வசூலிலும் இந்த திரைப்படம் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கமலஹாசன் இந்த திரைப்படத்தை போட்டு காட்டி இருக்கின்றார். படம் பார்த்த முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் படம் குறித்து நெகழ்ச்சியாக பதிவிட்டு இருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது நண்பன் கலைஞானி கமலஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல் திரைப்பட வடிவிலும் உண்மை கதைகளை இன்று இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றது. தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜர் அவர்களது வீரத்தையும், அர்ப்பணிப்பையும் உணர்வுபூர்வமாக படமாக்கி இருக்கும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தங்களது கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் சாய்பல்லவி மற்றும் அமரன் பட குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

நாட்டை பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களுக்கும், நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பிக் சல்யூட் என்று பேசி இருக்கின்றார். மேலும் இந்த திரைப்பட மிகவும் நன்றாக இருந்ததாகவும் கிளைமாக்ஸ் ரொம்பவே டச்சிங்காக இருந்ததாகவும், தன் கண்கள் கலங்கி விட்டது என்று அமரன் திரைப்படத்தை பார்த்த பிறகு கமலஹாசன் அவர்களிடம் முதல்வர் மு க ஸ்டாலின் கூறி அவருக்கு பாராட்டுகளை தெரிவித்திருக்கின்றார்.

Next Story