Categories: latest news

இப்பயே சொல்லிட்டோம் அப்புறம் சண்டை போடக்கூடாது!.. ஸ்ட்ரிட் நோட்டீஸ் கொடுத்த விடுதலை 2..!

விடுதலை 2:

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை வெற்றிமாறன் கடந்த 2 ஆண்டுகளாக எடுத்து வந்தார்.

விடுதலை மற்றும் விடுதலை 2 இரண்டு திரைப்படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கின்றார். பாடல் மற்றும் பின்னணி இசைகள் படத்தில் பிரபாதமாக வந்திருக்கின்றது. விடுதலை திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டு அவர் ஹீரோவாக காட்டப்பட்டிருந்தார்.

தற்போது விடுதலை 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு அதிக காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கின்றார். மேலும் நடிகர் கென் கருணாஸ், சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

விடுதலை 2 ரிலீஸ்:

விடுதலை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருந்தார்கள். ஆனால் இந்த திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்கு 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடைபெற்றது. மேலும் படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் 2 நாட்கள் இருப்பதால் படக்குழுவினர் தீவிர ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நடிகர் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி ஆகியோர் பல்வேறு youtube சேனல்களுக்கு சென்று படம் குறித்து ப்ரமோஷன் செய்து வருகிறார்கள்.

தணிக்கை சான்று:

ஒவ்வொரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சென்சார் குழுவினர் படத்தை பார்த்துவிட்டு தணிக்கை சான்று வழங்குவது வழக்கம். அந்த வகையில் விடுதலை 2 திரைப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு A தணிக்கை சான்று வழங்கி இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு அனுமதி கிடையாது. அவர்களுக்கு டிக்கெட்டும் வழங்கக்கூடாது என்பதுதான் விதி.

படக்குழு அறிக்கை:

சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், தற்போது ஒரு அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் அவர்கள் தெரிவித்திருந்ததாவது: ‘விடுதலை பாகம் 2 திரைப்படத்திற்கு ஏ தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே 18 வயது உட்பட்ட குழந்தைகள் திரையரங்கில் உள்ளே அனுமதி இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம். மீறி டிக்கெட் எடுத்தால் டிக்கெட் கட்டணம் வாபஸ் கிடைக்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று அறிவித்திருக்கின்றது.

ramya suresh

Recent Posts

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

24 minutes ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

53 minutes ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

3 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

6 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

18 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

19 hours ago