விஜய் வச்சிருக்கும் B பிளான்.. அப்போ தளபதி 70 இருக்கா?.. சித்ரா லட்சுமணன் சொன்ன சீக்ரெட்..

Actor Vijay: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் இவரின் கடைசி திரைப்படம் என கூறப்பட்டுள்ளது. காரணம் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியிருக்கின்றார்.
தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் கடந்த வருடம் அதனை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து கட்சியின் கொடி, பாடல் என அனைத்தையுமே அறிமுகம் செய்தார். மேலும் தனது முதல் மாநாட்டையும் மிகச் சிறப்பாக நடத்தி முடித்து இருந்தார். நடிகர் விஜய் படத்தில் பிசியாக நடித்து வந்தாலும் தனது கட்சி வேலைகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றார்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து அதிக விமர்சனங்களை சந்தித்து வருகின்றார். எந்த ஒரு விஷயத்திற்கும் நடிகர் விஜய் வீட்டை விட்டு வெளியில் வருவது கிடையாது. வீட்டிலிருந்து கொண்டே அரசியல் செய்து வருகின்றார் என்று தொடர்ந்து அவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது. இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நடிகர் விஜய் தன்னுடைய வேலைகளையும் மட்டும் செய்து வருகின்றார்.
இது ஒரு புறம் இருக்க நடிகர் விஜய் தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு முழுவதும் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது. அதாவது விஜய் அரசியல் வேலைகளில் ஈடுபட்டாலும் கேப் கிடைக்கும் நேரங்களில் தொடர்ந்து படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகர் விஜய் மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த தகவலை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் உறுதி செய்து இருக்கின்றார்.
அதாவது விஜய் பிளான் பி ஒன்றை வைத்திருப்பதாகவும், அதன்படி அரசியலில் பயணம் செய்து கொண்டே கேப் கிடைக்கும் நேரங்களிலெல்லாம் படத்தில் நடிக்கலாம் என்று நினைத்து இருப்பதாக சித்ரா லட்சுமணன் கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் விஜயை வைத்து கோட் என்கின்ற திரைப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவிடம் மேலும் ஒரு கதையை அவர் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
ஒரு வேலை நடிகர் விஜய் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடித்தால் வெங்கட் பிரபு தான் அந்த படத்தை இயக்குவார் என்று சித்ரா லட்சுமணன் தெரிவித்து இருக்கின்றார். ஆனால் மேலும் சில சினிமா விமர்சகர்கள் நடிகர் விஜய் அடுத்ததாக தளபதி 70 என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கு முடிவு செய்திருப்பதாகவும், அந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகின்றது. எது எப்படியோ நடிகர் விஜய் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார் என்பது அவரின் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது.