கோபப்பட்ட ரஞ்சித்!. தங்கலானுக்கு வந்த சிக்கல்!.. செம கடுப்பில் சியான் விக்ரம்...

by ராம் சுதன் |

ஒரு சினிமாவின் வெற்றி பல வகைகளில் பாதிக்கப்படும். சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும். தற்போதுள்ள டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி படம் இருக்க வேண்டும். வேறொரு பெரிய படம் அந்த படத்தோடு ரிலீஸ் ஆகக் கூடாது. ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக தியேட்டர்கள் கிடைக்க வேண்டும்.

இப்படி எல்லாம் அமைந்தால் மட்டுமே ஒரு படம் ஹிட் அடிக்கும். இல்லையெனில் தோல்வியை சந்திக்கும். விஜய் சேதுபதியின் மகாராஜா படம் கூட இதனால்தான் ஓடியது. சூரியின் கருடன் படம் கூட அப்படித்தான். அதேபோல், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை பெற்றாலும் பட ரிலீசுக்கு சிக்கல் ஏற்படும்.

விஜயின் தலைவா படம் கூட அப்படித்தான் பிரச்சனையில் சிக்கியது. 2 நாட்கள் படம் வெளியாகாமல் அப்படத்தின் தயாரிப்பாளர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆனார். இப்போது அதே பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் படமும் இந்த பிரச்சனையில் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ஒரு பிரச்சனையில் அரசுக்கு எதிராக கடுமையாக பேசியிருந்தார் பா.ரஞ்சித். இது தங்கலான் படத்தை பாதிக்கும் என பயந்து போயிருக்கிறாராம் அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. தங்கலான் படத்தோடு டீமாண்டி காலனி 2 படமும் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம்தான் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது. எனவே, ரஞ்சித் மீதுள்ள கோபத்தில் அதிக தியேட்டர்கள் அவர்கள் எடுத்துக்கொண்டால் தங்கலானுக்கு மிகவும் குறைவான தியேட்டர்களே கிடைக்கும் என பயப்படுகிறார் ஞானவேல் ராஜா.

ஏற்கனவே, பலமுறை ரிலீஸ் தேதி சொல்லப்பட்டு தள்ளி போய் இப்போது ஆகஸ்டு 15 என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரஞ்சித் இப்படி வாயை விட்டு ஏழரையை கொண்டு வந்துவிட்டாரே என பீதியில் இருக்கிறார் ஞானவேல் ராஜா என செய்திகள் கசிந்திருக்கிறது. இந்த விஷயம் சியான் விக்ரமுக்கும் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

Next Story