ஆரவாரத்துக்கு மத்தியில் மாஸ் என்ட்ரி... ஆரம்பமானது விஜயின் அரசியல் ஆட்டம்... எகிறிய எதிர்பார்ப்பு...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:02  )

தமிழ் சினிமாவில் பலரின் செல்ல பிள்ளையாக, பல ரசிகர்களுக்கு மாஸ் ஹீரோவாக வளம் வந்த விஜய் தமிழக அரசியலில் ஒரு மாற்றம் தேவை என்பதற்காக அரசியல் கட்சியை தொடங்கி இருக்கின்றார். இதற்காக சினிமாவை தள்ளி வைத்துவிட்டு தமிழக மக்களுக்காக அரசியலில் குதித்து இருக்கின்றார். தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கின்றார்.

இந்த கட்சியின் கொடி மற்றும் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநாடு இன்று இனிதே துவங்கியிருக்கின்றது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் மிகப்பிரம்மாண்டமாக மேடை அமைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

காலை முதலே தொண்டர்களின் கூட்டம் ஆர்ப்பரித்து வந்தது. ஆரம்பமே அசத்தல் என்பது போல் கட்டவுட்டில் மாஸ் காட்டத் தொடங்கி அனைத்தையும் மிகச் சிறப்பாக செய்து இருக்கின்றார். மாநாட்டுக்கு மட்டும் 80 கோடி ரூபாய்க்கு மேல் தனது சொந்த பணத்தை செலவு செய்திருக்கின்றார் நடிகர் விஜய். 5 நுழைவாயில், 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், எல் இ டி திரைகள், 150 க்கு அதிகமான மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ பாதுகாப்பு குழு என ஏராளமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

காலை முதலே தொண்டர்களின் கூட்டம் ஆர்ப்பரித்ததால் காவல்துறையினர் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினர். தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டிற்கு இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. இந்த மாநாட்டில் அனைவரும் எதிர்பார்ப்பது நடிகர் விஜயின் வருகை மற்றும் அவரின் பேச்சை தான். நேற்று இரவே மாநாட்டிற்கு கேரவனில் வருகை தந்த நடிகர் விஜய் இரவு முழுவதும் கேரவனில் தான் தூங்கினார்.

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு அதாவது 4 மணிக்கு மேடைக்கு வருகை தந்த நடிகர் விஜய் மேடைக்கு நடுவே போடப்பட்டிருக்கும் ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் மாஸ் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து நம் நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட அனைவருக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்று வரும் நிலையில் அனைவரும் எதிர்பார்க்கும் நடிகர் விஜய்யின் பேச்சுக்காக பலரும் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் அவர் என்ன பேசப் போகிறார் என்பதுதான் அனைவரிடத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Next Story