அமரன் படத்தில் நீக்கப்பட்ட அந்த காட்சி!.. மன்னிப்பு கேட்டதா கமல்ஹாசனின் நிறுவனம்?..

Published on: March 18, 2025
---Advertisement---

அமரன் திரைப்படம்:

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது.

வசூல் வேட்டை:

திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இருந்தே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை அமரன் திரைப்படம் சிறப்பாக பூர்த்தி செய்திருந்தது. படம் வெளியான நாளிலிருந்து தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது. இதனால் படம் முதல் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

6-வது வாரமாக தற்போது வரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் 350 கோடி வசூலை நெருங்கி விட்டதாக கூறப்படுகின்றது. மேலும் நெட்ப்ளிக்ஸ் ஒடிடியில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதியிலிருந்து படம் வெளியாகி அதிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அமரன் திரைப்படம் வெளியான நாளிலிருந்து பல சாதனைகளை படைத்து வருகின்றது.

சிவகார்த்திகேயன்-சாய்பல்லவி:

அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்திருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் அவரின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து இருந்தார் என்பதை காட்டிலும் வாழ்ந்து இருந்தார் என்றே சொல்ல வேண்டும். இருவரும் இந்த திரைப்படத்தை இரு தூண்களாக இருந்து சிறப்பாக எடுத்துச் சென்றனர்.

காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் இருவரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருந்தார்கள். மேலும் சிவகார்த்திகேயனுக்கு இந்த திரைப்படம் அவரது கேரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்துள்ளது. இதனால் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்திருக்கின்றார். மேலும் நடிகை சாய் பல்லவி இந்த திரைப்படத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கின்றார்.

செல்போன் சர்ச்சை:

திரைப்படத்தில் ஒரு காட்சியில் சாய் பல்லவி தன்னுடைய தொலைபேசி எண் என்று கூறி ஒரு எண்ணை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பார். அந்த எண் உண்மையில் வாகிசன் என்கின்ற இளைஞருடைய எண். அந்த படத்தில் இடம்பெற்று இருப்பது சாய் பல்லவியின் செல் போன் நம்பர் என்று எண்ணிய ரசிகர்கள் தினமும் அந்த எண்ணுக்கு கால் செய்து தொல்லை கொடுத்திருக்கிறார்கள். இதனால் அந்த இளைஞர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். அவர் தனக்கு 1.10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

காட்சி நீக்கம்:

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அமரன் திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த செல்போன் எண் காட்சியை நீக்கி புதிய தணிக்கை சான்று பெற்றதாக கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனம் சென்னை நீதிமன்றத்தில் பதிலளித்திருக்கின்றது. மேலும் அவரிடம் கமலஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டு விட்டதாக ஒரு தகவல் வெளியாகி வருகின்றது. ஆனால் அவர் கேட்ட இழப்பீடு தொகையை கொடுத்தார்களா? என்பது தெரியவில்லை.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment