உள்ள அவ்ளோ கண்ட்ராவி நடந்துச்சு.. நான் தான் திருத்தினேன்! பிக்பாஸ் பற்றி கூல் சுரேஷ் ஆவேசம்
மக்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சியாக கருதப்படுவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி. 7 சீசன்களாக நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது ரசிகர்களும் அந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை பார்க்க ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்தந்த மொழிகளில் பெரிய பெரிய சூப்பர் ஸ்டார்கள் நடத்தும் இந்த நிகழ்ச்சி டி ஆர் பியிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. தமிழில் பொருத்தவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
அதற்காக அவருக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. கடந்த சீசனில் யாருமே எதிர்பாராத விதமாக கூல் சுரேஷ் அந்த போட்டியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு வரை பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி அவதூறாக பேசி வந்தார் கூல் சுரேஷ்.
அது என்ன பெரிய பிக் பாஸ்? அதில் இருக்கும் பெண்கள் அறையும் குறையுமாக திரிகிறார்கள். அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா? என்றெல்லாம் பேசியிருந்தார் .ஆனால் அதன் பிறகு ஏழாவது சீசனில் சக போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி கூல் சுரேஷ் மிகவும் கடுமையாக விமர்சித்திருந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.
தற்போது அரசியலிலும் இறங்க ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார் கூல் சுரேஷ். இந்த நிலையில் அவரிடம் நிருபர் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என சொன்னீர்கள். ஆனால் வந்து விட்டீர்கள். அதேபோல் அரசியலுக்கும் வரமாட்டேன் என சொல்லி இப்போது அரசியலுக்கு வந்து விட்டீர்களே என கேட்டார். அதற்கு பதில் அளித்த கூல் சுரேஷ் 'பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் நான் ஏழாவது சீசனில் தான் போட்டியாளராக கலந்து கொண்டேன். ஆனால் அதற்கு முன்பு ஆறு சீசன் வரைக்கும் அது ஒரு ஆபாசமாகவே பார்க்கப்பட்டது.
அதில் போட்டியாளராக கலந்து கொண்ட பெண்கள் அனைவருமே ஆடைகளையா அணிந்திருந்தனர்? கண்ட்ராவி ஜிங்கு ஜிங்குனு ஆடிக்கிட்டு கேவலமாக பார்க்கப்பட்டது. ஆனால் நான் போன பிறகு தான் அவை எல்லாம் திருத்தினேன். என்னோட சீசனில் உள்ள பெண்கள் அந்த மாதிரி இருந்தார்களா என சொல்லுங்கள் பார்ப்போம். அது எல்லாமே மாற்றப்பட்டது. அதற்கு காரணம் நான் தான் என கூறியிருக்கிறார்.