ஹீரோவானதும் வேலைய காட்ட ஆரம்பிச்சுட்டாருல! நடிகை கைகொடுக்க கூல் சுரேஷ் பண்ணிய காரியம்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:57  )

ஒரு காமெடியனாக இருந்து பல திரைப்படங்களைப் பற்றி விமர்சனம் செய்து இன்று ஒரு படத்தின் ஹீரோவாக மாறி இருக்கிறார் நடிகர் கூல் சுரேஷ். ஆரம்பத்தில் வில்லனாக சில படங்களில் நடித்தவர் கூல் சுரேஷ். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் காக்க காக்க படத்தில் ஒரு பள்ளி மாணவியை கிண்டல் செய்யும் ஒரு ரவுடி கும்பல் தலைவனாக நடித்திருப்பார்.

அவரை தட்டி கேட்டு அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைப்பார் சூர்யா. இப்படி சின்ன சின்ன ரவுடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். காலப் போக்கில் காமெடி கதாபாத்திரங்களிலும் தலை காட்டினார். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் வெளியாகும் புதுப்புது படங்களை பற்றி அவருடைய ஸ்டைலில் விமர்சனம் செய்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

இதனாலேயே கூல் சுரேஷுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. இதனிடையில் பிக் பாஸில் கலந்து கொண்டு அங்கு ஒரு நல்ல பெயரை சம்பாதித்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த வரைக்கும் வெளியில் இருந்த கூல் சுரேஷா இது என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். அந்த அளவுக்கு உள்ளே இருக்கும் சக போட்டியாளர்களிடம் பாசமாக பழகுவது பேசுவது அறிவுரைகளை வழங்குவது என ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து பிக் பாஸ் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார்.

வெளியே வந்ததும் அவருடைய பேச்சில் கொஞ்சம் மாற்றம் இருந்தது. இந்த நிலையில் தான் திடீரென ஒரு படத்தின் ஹீரோவாக மாறி இருக்க்கிறார் சுரேஷ். செல்லம் இயக்கத்தில் ஏற்கனவே பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் நடிக்க இருந்த திரைப்படம் மஞ்சள் வீரன். அந்தப் படத்தில் தான் இப்போது ஹீரோவாகி இருக்கிறார் கூல் சுரேஷ் .

அது சம்பந்தமான பிரமோஷன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வந்தது. இந்த நிலையில் ஒரு வீடியோ என்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அதில் பிரபல கிளாமர் நடிகை சஞ்சனாவிடம் கூல் சுரேஷ் ஃபன் செய்த சம்பவம் தான் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. சஞ்சனா கூல் சுரேஷிடம் கை கொடுக்க அதற்கு கூல் சுரேஷ் அவரை கையைப் பிடித்து சுத்தி கொண்டே இருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் இப்பவே ஆட்டத்த காட்டிட்டாரே கூல் சுரேஷ் என கிண்டலடித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DBYfI1qyUuh/?igsh=bjllZnh2Z2ZvamFy

Next Story