டிடிஎஃப் வாசனுக்கு பதிலாக மஞ்சள் வீரனா நடிக்கப்போறது யாரு தெரியுமா?.. அவரவிட பயங்கரமான ஆளாச்சே!..
மஞ்சள் வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக காத்திருந்த டிடிஎஃப் வாசனை அவரது முதல் படத்திலிருந்து படத்தின் இயக்குனர் வெளியேற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் செல் அம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் எனும் படம் உருவாகி வரும் நிலையில், அந்த படத்தின் ஹீரோவையே மாற்றியமைத்த நிலையில், அதன் பின்னர் அந்த படமே டிராப் ஆகி விட்டதா? என்கிற கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், கூல் சுரேஷ் மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறேன் என்றும் ஏற்கனவே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது ஹீரோவாக மாறியுள்ளேன் என அவரே கூறி அலப்பறையை கிளப்பியுள்ளார்.
டிடிஎஃப் வாசனை விட இவர் பயங்கரமான ஆளாச்சே என்றும் மத்தவங்க படத்துக்கே கூல் சுரேஷ் வேறலெவலில் புரமோஷன் செய்வார் தன்னோட படத்துக்கு அதை விட பயங்கரமா செய்வாரே என ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.
எப்படியும் மஞ்சள் வீரன் படத்தில் யார் நடித்தாலும் அந்த பக்கமே தலை வைக்க போறது இல்லை. இதுல டிடிஎஃப் வாசன் நடிச்சா என்ன கூல் சுரேஷ் நடிச்ச என்ன ஆளவிடுங்கப்பா என ரசிகர்கள் தெறித்து ஓடுகின்றனர்.
மஞ்சள் வீரன் படத்தில் இருந்தே டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்ட நிலையில், இனிமேல் அவருக்கு எந்த படத்தில் நடிக்கப் வாய்ப்பு கிடைக்கப் போகுதோ என ஏகப்பட்ட பேர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎஃப் வாசன் நடிக்கவில்லை என்றதுமே பிக் பாஸ் வீட்டுக்கு தனது காதலி ஜோயாவுடன் வரப் போகிறார் என வதந்திகள் பரவின. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் டிடிஎஃப் வாசன் மற்றும் ஷாலின் ஜோயாவுக்கு வாய்புக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.