கூலி படப்பிடிப்பில் இத்தனை ரஜினியா? யார் அசல்னே தெரியலையாமே...!
லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என மாஸான படங்களைக் கொடுத்துள்ளார். எல்லாமே அதிரடி தான். அந்த வகையில் முதன்முதலாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்துள்ளார். இந்தப் படத்தின் பெயர் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.
கன்னட நடிகர் உபேந்திராவும் நடித்துள்ளார். நாகர்ஜூனா, சௌபின் சாகிர், சுருதிஹாசன் ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் வெளியான டிஸ்கோ சாங் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக்குள்ளானது.
ரஜினியை இந்தப் படத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டார் என்றும் செயற்கை மழையில் நாள் முழுக்க நனைய விட்டார் என்றும் அதனால் தான் அவசரமாக சென்னையில் வந்து சிகிச்சை எடுத்தார் என்றும் இயக்குனர் லோகேஷின் மீது பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
ஆனால் அவர் அதை எல்லாம் மறுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நாங்க ரஜினியைப் பார்த்துப் பார்த்துக் கவனித்தோம். உங்களுக்கு ஏதும் சந்தேகமா இருந்தா தயாரிப்பாளரைக் கேளுங்க. அல்லது என்னிடமே நேரடியாகக் கேளுங்க.
தவறான தகவலை சமூகவலைதளங்களில் பரப்பாதீங்க. ரஜினி சிகிச்சை செய்வது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதுதான். அதற்கேற்ப தான் நாங்களும் ஷெடுல் வைத்து படப்பிடிப்பை நடத்தினோம் என்று விளக்கம் அளித்தார்.
அந்தவகையில் தற்போது கூலி படத்தின் படப்பிடிப்புக்கு மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வு எடுத்தப் பிறகு கூலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அந்தப் படப்பிடிப்பில் ஒரு அதிசயமான சம்பவம் ஒன்றை பிரபலம் ஒருவர் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
ரஜினிகாந்த் சிகிச்சைக்குப் பிறகு கூலி படத்து சூட்டிங்கிற்கு எனக்குத் தெரிஞ்ச நண்பர் போயிருக்காரு. அங்க போனா நாலஞ்சு ரஜினி நிக்கிறாங்களாம். எந்த ரஜினி உண்மையானவருன்னே தெரியலையாம் என்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.
ஜெயிலர் படத்தின் வசூலை வேட்டையன் முறியடிக்கும்னு சொன்னாங்க. அது எதிர்பார்த்த அளவு வசூலை ஈடடவில்லை. இந்தப் படமாவது முறியடிக்குமா?