Categories: latest news

கூலி படத்துக்கு வில்லன் அந்த பிரபலமா? அப்போ ரொம்ப டஃப் கொடுப்பாரே…!

த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான வேட்டையன் படம் எதிர்பார்த்த அளவு வசூலை ஈட்டவில்லைன்னு பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில நாள்களில் படம் வெற்றியா, தோல்வியான்னு தெரிந்து விடும் என்கிறார்கள். இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படம் சன்பிக்சர்ஸ் தயாரிக்க, லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அதிரடியாக உருவாகி வருகிறது.

ஜெயிலரை விட ஒரு படி மேலாகப் போய் 1000 கோடியைத் தொட வேண்டும் என்கிற எண்ணத்தில் படக்குழுவினர் உழைப்பைக் கொட்டி வருகிறார்கள். ஒரு பக்கம் ரஜினியின் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதன்பிறகு ஓய்வு எடுக்கச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்றும் சொல்கிறார்கள். இதுகுறித்தும், கூலி படத்தின் அப்டேட் குறித்தும் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கூலி படத்தில் அமீர்கான் 100 சதவீதம் இருக்காரு. அவரு ரொம்ப ரொம்ப சின்ன ரோல். 5 அல்லது 8 நிமிஷம் இருக்கப் போறாரு. ரோலக்ஸ் மாதிரி ரோலான்னு கேட்டாங்க. இருக்கலாம்னு சொல்கிறார் அந்தனன்.

ஜெயிலர் கலெக்ஷனை கோட் முறியடிக்குமா, வேட்டையன் முறியடிக்குமான்னு கேட்டாங்க. ஆனா நான் இருக்கேன்டான்னு வர்றாரு கூலி. ரஜினி அக்டோபர்.16ம் தேதி சூட்டிங் போயிருக்கணும். ஆனா போனதா தெரியல. சன் பிக்சர்ஸப் பொருத்தவரைக்கும் நடிகர் நடிகைகள் கட்டாயமா புரொமோஷனுக்கு வரணும்கறதுல தெளிவா இருக்காங்க.

அஜீத் அதனால தான் சன் பிக்சர்ஸை வேணாம்னுட்டாரு. அவரு பேட்டி கொடுக்க மாட்டாரு. புரொமோஷனுக்குப் போக மாட்டாரு. ஆனா கூலியைப் பொருத்தவரை எல்லாரும் புரொமோஷனுக்கு வரணும். ஆடியோ லாஞ்ச்சுக்கு வரணும்.

எல்லா லாங்குவேஜ்லயும் அந்தப் படம் போய் சேர்ந்துடும். அதனால சன்பிக்சர்ஸ் அதைத் தெளிவா சொல்லிடுவாங்க. அதனால 1000 கோடியை படம் நிச்சயம் தொடுமான்னு தெரியாது. அதற்கான முயற்சி நிச்சயமா இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கூலி படத்தில் ரோலக்ஸ் மாதிரி கேரக்டர் என்ற கேள்விக்கு இருக்கலாம்னு சொன்ன அந்தனன் பதிலை வைத்துப் பார்த்தால் அமீர்கான் தான் படத்தில் கேமியோ வில்லனாக இருப்பார்னு தெரிகிறது. அப்படிப் பார்க்கும்போது பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் பிரபல நடிகர் இவர். ரஜினிக்கு ரொம்பவே டஃப் கொடுத்துவிடுவாரேன்னும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் சத்யராஜ் கூட ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அவர் வில்லன் இல்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் இதற்கு முன் ரஜினியுடன் பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

Recent Posts

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

28 minutes ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

3 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

16 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

17 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

17 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

18 hours ago