கோலிவுட்டிலேயே இதுதான் முதல்முறை.. ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்த ‘கூலி’

Published on: August 8, 2025
---Advertisement---

கூலி சாதனை:

ரஜினியுடன் பல மெகாஸ்டார்கள் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தின் ஓவர்சீஸ் உரிமை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி .இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. படத்தில் ரஜினிகாந்த் உடன் நாகார்ஜுனா, அமீர்கான், சத்தியராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாகிர் என பல மொழி முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

ஓவர்சீஸ் உரிமை:

படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தின் டீசர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் படத்தின் வியாபாரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் இந்த படத்திற்கான ஓவர்சீஸ் உரிமை கிட்டத்தட்ட 81 கோடிக்கு விற்று இருப்பதாக தெரிகிறது. கோலிவுட்டிலேயே இந்த படத்திற்கு தான் இதுவரை கிடைத்த அதிகபட்ச ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது.

விஜய்க்கே இவ்வளவுதான்;

5 தசாப்தகால உச்ச நட்சத்திரமாக விளங்கும் சூப்பர் ஸ்டார் இன்னும் அவருடைய அந்தஸ்தை விட்டுக் கொடுக்காத அளவுக்கு உயர்ந்து கொண்டே போகிறார். இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படத்திற்கும் இவ்வளவு பெரிய விலை கொடுத்து யாரும் வாங்க முன்வரவில்லை. இதற்கு முன் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் ஓவர்சீஸ் உரிமை அறுபது கோடிக்கு விற்றதாக தெரிகிறது.

அதிகபட்ச ஒப்பந்தம்:

அடுத்ததாக கூலி திரைப்படம் தான் அதிகபட்சமாக 81 கோடி வரைக்கும் விற்பனையாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவே ஒரு பெரிய சாதனை என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் படம் ரிலீஸ் ஆவதற்கு ஒன்றரை மாத காலம் இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி இன்னும் படத்தை பெரிய அளவில் கொண்டு போகவும் வாய்ப்பு இருக்கிறது.

coolie

coolie

ஒட்டுமொத்தமாக இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தொடர்ந்து ஹிட் படங்களையே கொடுத்து வந்த லோகேஷ் இப்போது ரஜினியுடன் இணைந்து இருப்பது இன்னும் இந்த படத்திற்கு கூடுதல் பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. எப்படி கமலுக்கு விக்ரம் என்ற ஒரு மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தாரோ அதைப்போல ரஜினிக்கும் அதைவிட ஒரு பெரிய அளவில் வெற்றியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment