தலைவர் ரெடி… கூலி படத்தில் எண்ட்ரி குறித்த சூப்பர் அப்டேட்… சூப்பர்ஸ்டாருனா சும்மாவா?
Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் ஷூட்டிங்கின் அடுத்த கட்ட அப்டேட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய வெற்றி பாதையில் இருக்கிறார். ஜெயிலர் படத்தின் மாஸ் ஹிட் வெற்றிக்கு பின்னர் அவர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. படமும் ரசிகர்களிடம் இதுவரை நல்ல விமர்சனங்களை குவித்து வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் மூன்றாவது முறையாக ரஜினிக்கு இசையமைக்க இருக்கிறார் அனிருத்.
இப்படத்தில் ரஜினியுடன் செளபீன் ஷாகீர், நாகார்ஜுனா, சத்தியராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வந்தது. தங்க கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
கடந்த மாதம் இப்படத்தில் ஷூட்டிங் குறித்த காட்சிகள் இணையத்தில் கசிந்தது. நாகர்ஜுனாவின் சண்டைக்காட்சி அடங்கிய வீடியோ தான் என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ச்சியாக, இது பலரின் உழைப்பு இதுபோல் செய்யக்கூடாது என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கோரிக்கை விடுத்து இருந்தார்.
அந்த வீடியோவை வைத்து பார்க்கும் போது இதுவும் லோகேஷின் ஸ்டைலில் ஒரு படமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் திடீரென நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
ஆனால் அவருக்கு இருதயத்தில் செல்லும் ரத்தக்குழாயில் வீக்கம் இருந்ததால் அதற்குரிய ஸ்ட்ரென்ட் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. சிகிச்சை நல்ல முறையில் முடிந்ததும் இரண்டு நாட்களில் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
கூலி திரைப்பட குழு ரஜினிகாந்த் இல்லாமல் இருக்கும் காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கி வருகின்றனர். ஸ்ருதியின் காட்சிகள் முடிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர் 16ஆம் தேதியிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறாராம். அவரின் உடல்நிலை கருதி தற்போது ஷூட்டிங் சென்னையில் மட்டுமே நடத்தப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.