Categories: latest news

முடிச்சிடலாமா?.. இனிமே இதுதான் டிரெண்டே!.. செம ஸ்பீடில் கூலி படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த்!..

வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. வழக்கம் போல் அனிருத் ரஜினியின் படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், நாகர்ஜூனா, உப்பேந்திரா, சௌபின் சாஹிர் மற்றும் சுருதிஹாசன் என பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தின் டிஜிட்டல் விற்பனையும் அமோகமாக நடந்துள்ளது. அமேசான் நிறுவனம் இந்த படத்தை 120 கோடிக்கு வாங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ரஜினியின் முந்தைய படங்கள் போல் இல்லாமல் இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அதற்கு முக்கியமான ஒரு காரணம் லோகேஷ். ஏற்கனவே லோகேஷின் இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களுமே வசூலில் பெரிய அளவில் சாதனை படைத்த படங்கள். குறிப்பாக அதள பாதாளத்தில் கிடந்த கமலை தூக்கி நிறுத்தியதே லோகேஷ் தான். விக்ரம் படத்திற்கு பிறகு தான் கமலின் காட்டில் மழை என்றே சொல்லலாம்.

அதனால் ரஜினியும் விக்ரம் மாதிரி ஒரு மாஸ் படத்தை தானும் கொடுக்க வேண்டும் என லோகேஷுடன் இணைந்தார். படத்தின் டீஸர் , போஸ்டர் எல்லாம் வெளியாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் ஒரு வீடியோவை போட்டு தெரிவித்திருக்கிறார்கள். அதில் ரஜினியை லோகேஷ் இயக்கும் காட்சியில் இருந்து தொடங்கி கடைசி கட்ட படப்பிடிப்பு வரை சின்ன சின்ன பிட்டாக ஒரு வீடியோவாகவே தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

ராம் சுதன்

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

6 minutes ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

12 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

13 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago