மனசுவிட்டு பேசுங்க!.. ஜெயம் ரவி-ஆர்த்தி சேர்வதற்கு வாய்ப்பு இருக்கு போலயே.. நடந்தது என்ன?..

Published on: March 18, 2025
---Advertisement---

நடிகர் ஜெயம் ரவி: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் குறைந்த அளவு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கின்றார். தனக்கென கதையை தேர்வு செய்து நடிக்கக்கூடிய ஒரு நடிகர். இவர் ஒரு சினிமா குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை எடிட்டர் மோகன்.

மேலும் இவரின் அண்ணன் மோகன் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வளர்ந்தவர். இவர் இயக்கத்தில் ஜெயம் என்கிற திரைப்படத்தின் மூலமாக நடித்து சினிமாவில் அறிமுகமான ஜெயம் ரவி அதனைத் தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் என தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.

பின்னர் பேராண்மை, தனி ஒருவன், அடங்கமறு போன்ற ஆக்சன் படங்களில் நடித்து ஆக்சன் ஹீரோவாகவும் ஜொலித்து வந்தார். ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். சினிமா பிரபலங்களை பொறாமைப்படும் அளவிற்கு சிறந்த ஜோடியாக வலம் வந்தார்கள்.

யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை திடீரென்று கடந்து சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதள பக்கத்தில் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள் கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் திடீரென்று பிரிவதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் இந்த முடிவு ஜெயம் ரவி தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவு என்றும், தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று ஆர்த்தி ரவி அதன் பிறகு அறிக்கை வெளியிட்டிருந்தார். பின்னர் இந்த விஷயம் சமூக வலைதள பக்கங்களில் பெரும் பேசு பொருளாக மாறியது. ஊடகங்களில் யார் மீது தவறு, யார் என்ன தவறு செய்தார், எதற்காக இந்த விவாகரத்து என்று தொடர்ந்து கருத்து கூற தொடங்கி விட்டார்கள்.

இந்நிலையில் தன் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி ஜெயம் ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு இருவரும் நேரில் வந்து ஆஜராகி இருந்த நிலையில் நீதிபதி ஆர்த்தியையும் ஜெயம் ரவியையும் மனம் விட்டு பேசும்படி உத்தரவிட்டிருந்தார். பின்னர் இருவரும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தார்கள்.

மனம் விட்டு பேசும்படி நீதிபதி அறிவுறுத்ததின் பெயரில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. நிச்சயம் ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசும்போது அவர்களுக்குள் ஏதாவது மனஸ்தாபம் இருந்தால் அதனை சரி செய்து கொள்ள முடியும். அதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment