தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் ஜெயம் ரவி. சில மாதங்களுக்கு முன்பு தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். மேலும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்கிற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறார். அதில் யோகி பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை ரவி மோகனே இயக்க திட்டமிட்டுருக்கிறார்.
அதே போல் Bro Code என்கிற பெயரில் ஒரு படத்தில் ஒரு படமும் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரவி மோகன். எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் புரமோ வீடியோவும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கி வருகிறார். டார்ச்சர் கொடுக்கும் மூன்று மனைவிகளிடமிருந்து அவர்களின் கணவர்கள் எப்படி எஸ்கேப் ஆகி வெளியே போகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இந்நிலையில்தான் புரோ கோட் தலைப்புக்கு சிக்கல் வந்திருக்கிறது.டெல்லியைச் சேர்ந்த புரோ கோட் என்கிற மதுபான நிறுவனம் எங்கள் பெயரை திரைப்படத்திற்கு தலைப்பாக வைக்க கூடாது என சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் ரவி மோகன் ஸ்டுடியோஸ் சார்பில் நீதிமன்றத்தில் அளித்த மனுவில் ‘புரோ கோட் என்கிற தலைப்பு எந்த விதத்திலும் மதுபானம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் வணிக உரிமையை மீறவில்லை. அதற்கும் இதற்கும் தொடர்பில்லை’ என குறிப்பிடிருந்தது. எனவே ரவி மோகன் ஸ்டுடியோஸ் புரோ கோட் தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க முடியாது என கடந்த 5ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற கூறியது..
ஆனால், Bro Code மதுபான நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்தான் புரோ கோட் தலைப்பை திரைப்படத்திற்கு பயன்படுத்த டெல்லி நீதிமன்றம் தடை விதித்து தற்போது உத்தரவிட்டிருக்கிறது.இந்த வழக்கில் வாதாடி ரவி மோகன் வெற்றி பெறுவாரா? இல்லை புரோட் கோட் என்கிற தலைப்பை மாற்றுவாரா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…