சிவகார்த்திகேயன் படத்துக்கு ஆப்பு வைத்த தேவரா!.. இந்த பஞ்சாயத்து முடியாது போல!...
Sivakarthikeyan: சினிமாவில் ஒரு பழக்கம் உண்டு. ஒரு படம் தோல்வி அடைந்து அதனால் வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதே தயாரிப்பாளர் எடுக்கும் அடுத்த படம் வெளியாகும் போது வந்து பிரச்சனை செய்வார்கள். அந்த நஷ்டத்தை கொடுத்துவிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என கட்டையை போடுவார்கள்.
இது பல தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் நடந்திருக்கிறது. சில நடிகர்கள் விபரமாக இதிலெல்லாம் தலையிட மாட்டார்கள். 'அது தயாரிப்பாளர் ஆச்சி.. அவங்களாச்சி' என கமுக்கமாக இருந்துவிடுவார்கள். திரையுலகில் இந்த பிரச்சனையில் அதிகம் சிக்கியது சிவகார்த்திகேயனும், சிம்புவும்தான்.
சிம்புவால் நஷ்டமடைந்த சில தயாரிப்பாளர்கள் கொடுத்த புகார் தொடர்பான பஞ்சாயத்துகள் இப்போது வரை இழுத்துக்கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட தயாரிப்பாளர் 10 கோடி நஷ்டமடைந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடந்து கொண்டிருக்கிறார்.
அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒவ்வொரு படமும் வெளியாகும் அவரின் பழைய கடனை கேட்டு பலரும் கட்டையை போடுவர்கள். அப்போதெல்லாம் சம்பளத்தில் இருந்து விட்டுக்கொடுத்தோ, அல்லது கையிலிருந்து பணத்தை கொடுத்தோ படங்களை ரிலீஸ் செய்து வந்தார் சிவகார்த்திகேயன்.
ஒருவழியாக 90 சதவீத கடனிலிருந்து மீண்டுவிட்டார் சிவகார்த்திகேயன். ஆனால், ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்திற்கு சிக்கல் வரும் கணிக்கப்படுகிறது. இந்த படத்தை தயாரிக்கும் திருப்பதி பிரசாத்தான் தேவரா படத்தை வாங்கி தமிழில் வெளியிட்டார்.
8 கோடிக்கு வாங்கி ஒன்றரை கோடி விளம்பரம் செய்து வினியோகஸ்தர்களிடம் கொடுத்தார். ஆனால், இந்த படம் தமிழகத்தில் ஒன்றரை கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. 8 கோடி அவருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு எனில் 8 கோடி வரை கொடுத்து படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் நஷ்டமடைந்திருக்கிறார்கள்.
எனவே, அவரின் தயாரிப்பில் உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் படம் வெளியாகும்போது இந்த நஷ்டத்தை கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என கண்டிப்பாக பிரச்சனை செய்வார்கள் என கணிக்கப்படுகிறது.