சமீபத்தில் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரெட்ரோ. கங்குவா திரைப்படத்தின் மோசமான தோல்விக்கு பிறகு சூர்யா நடித்து வெளியான திரைப்படம் தான் ரெட்ரோ. அதனால் இந்த படத்தின் மீது பெருமளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. ஆனால் படம் பார்த்தவர்களில் பெரும்பாலானோர் படத்தின் ஸ்கிரீன் ப்ளே நன்றாக இருக்கிறது. கதை சூப்பர் என்றெல்லாம் கூறி வந்தனர். ஆனால் சமூக வலைதளங்களில் சூர்யாவுக்கு எதிராகவும் அவர் நடித்த ரெட்ரோ திரைப்படத்திற்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில் படத்திற்கு லாபமா நஷ்டமா என்ற ஒரு கேள்விக்கு பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவருடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதாவது ஒரு படத்தின் வெற்றி என்பது இரண்டு வகைகளில் நாம் பார்க்க முடியும். பாக்ஸ் ஆபிஸ் வெற்றி, வணிகரீதி வெற்றி. பாக்ஸ் ஆபிஸ் வெற்றி என்பது பல பேரின் பார்வையில் எப்படி என்றால் எவ்வளவு இந்த படம் வசூல் தியேட்டரில் கலெக்ட் பண்ணி இருக்கிறது. திரையரங்க உரிமையாளர்களை பொறுத்த வரைக்கும் எப்படி இருக்கலாம்? ஊடகங்களைப் பொறுத்த வரைக்கும் எப்படி இருக்கலாம் என்பதுதான்.
ஆனால் ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது ஓவரால் வெற்றி. அதாவது வணிக ரீதியில் அந்த படம் எவ்வளவு எடுத்திருக்கிறது என்பதுதான். ஒரு திரைப்படம் அந்த தயாரிப்பாளருக்கு எவ்வளவு பணத்தை கொடுத்து இருக்கிறது என்பதுதான் வணிக ரீதியிலான வெற்றி. ஒரு படத்திற்கு சாட்டிலைட் டிஜிட்டல், ஹிந்தி டப்பிங், ஓவர் சீஸ், மியூசிக் ரைட்ஸ், தியேட்டரிக்கல் ரைட்ஸ் இப்படி எல்லா ரைட்ஸிலும் ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு வருகிறதோ அதை பொறுத்து தான் ஒரு படம் வணிக ரீதியில் வெற்றியா இல்லையா என்பதை நான் சொல்ல முடியும்.
வெறுமனே தியேட்டரிக்கல் ரைட்ஸிலிருந்து மட்டும் இவர்களுக்கு நினைத்த மாதிரி வசூல் வரவில்லை என்றதும் இந்த படம் மொத்தமாக தோற்றுவிட்டது என சொல்லுவது இவர்களுக்கு அதைப் பற்றிய அறிவு இல்லை என்பது தான் நமக்கு தெரிகிறது. ரெட்ரோ திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் நல்ல விலைக்கு போயிருக்கிறது. அதனுடைய நம்பர் என்ன என்பது தெரியாது. ஆனால் நல்ல விலைக்கு போய் இருப்பதாக சொல்லப்படுகிறது .தோராயமாக 80 கோடி வரைக்கும் டிஜிட்டல் ரைட்ஸ் போயிருக்கும் என சொல்கிறார்கள் .
suryiya
அதன் பிறகு இந்தி டப்பிங் ரைட்ஸ் அது தனியாக இருக்கிறது. அதன் பிறகு ஓவர்சீஸ் ரைட்ஸ் 12 இலிருந்து 15 கோடி வரை இந்த படம் அள்ளி இருக்கிறது .தமிழ்நாடு தியேட்டரிக்கல் 104 கோடி என சொல்லப்பட்டது. ஆக மொத்தம் 40 கோடி என்பது கோடி இந்தி டப்பிங் ரைட்ஸ். மியூசிக் ரைட்ஸ் சாட்டிலைட் ரைட்ஸ் எல்லாம் சேர்த்து இந்த படம் பெரிய அளவில் வாரி இறைத்திருக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட் ஒரு 80 கோடி இருக்கலாம். 80 கோடி தான் இந்த படத்தின் பட்ஜெட் என்றால் டிஜிட்டல் ரைட்ஸ்லயே 100 கோடிக்கும் மேல் கலெக்ட் செய்திருப்பதால் இது தயாரிப்பாளர்களுக்கு லாபம் தான். இனிமேல் வரக்கூடிய பணம் எல்லாமே லாபம் தான் .அதனால் தான் இந்த படம் இவ்வளவு பெரிய லாபம் வந்ததனால் தான் சூர்யா அதிலிருந்து ஒரு பத்து கொடியை எடுத்து தனது அகரம் அறக்கட்டளைக்கு கொடுத்திருக்கிறார் என தனஞ்செயன் கூறினார்.
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…
தமிழ் சினிமாவில்…
தமிழ் சினிமாவில்…
இந்திய சினிமா…