இளையராஜாவே ஊத்திக்கிச்சு!. அடுத்து அப்துகலாம் பயோபிக்காம்!. இதாவது நடக்குமா?!…

Published on: August 8, 2025
---Advertisement---

Dhanush: சினிமாவில் அறிவிக்கும் படங்கள் எல்லாமே ஷூட்டிங் போவார்கள் என சொல்ல முடியாது. ஏராளமான படங்கள் வெறும் அறிவிப்போடு நின்றுவிடும். சில படங்கள் சில நாட்கள் மட்டும் ஷூட்டிங் நடந்து நின்றுவிடும். சில படங்கள் முழுப்படப்பிடிப்பும் நடந்து நின்றுவிடும். இதில் இளையராஜாவின் பயோபிக் அறிவிப்போடு நின்று போனது.

தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. 80களில் பல படங்கள் வெற்றி பெற்றதற்கு இவரே காரணமாக இருந்தார். தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து கம்யூனிச மேடைகளில் இசையமைத்து பாடிகொண்டிருந்தார். அதன்பின் இசையமைப்பாளராக ஆகும் எண்ணத்தில் சென்னை வந்து முயற்சி செய்தார்.

பல முயற்சிகளுக்கு பின் அன்னக்கிளி படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் தனது கிராமத்திய இசை மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இளையராஜா தனது வாழ்வில் கடந்து பாதைகள் மற்றும் அனுபவங்களை அடிப்படையாக வைத்து அவரின் வாழ்க்கையை படமாக எடுக்க திட்டமிட்டனர்.

அதில், தனுஷ் நடிப்பதாகவும் கேப்டன் மில்லர் படத்தை இயக்கி அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு போஸ்டரெல்லாம் வெளியானது. இளையராஜாவின் முகத்தோடு தனுஷின் முகம் ஒத்துப்போனதால் போஸ்டரும் சிறப்பாகவே இருந்தது. ஆனால், என்ன காரணமோ அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவே இல்லை.

தனுஷும் ராயன், இட்லி கடை, குபேரா என தொடர்ந்து நடித்துகொண்டே இருந்தார். எனவே, இளையராஜா பயோபிக் டேக் ஆப் ஆகுமா என்பதே சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது. இந்நிலையில், மறைந்த விஞ்ஞானி மற்றும் ஜனாதிபதி அபதுல் கலாமின் பயோபிக் ‘Kalam the missile man of india’ என்கிற பெயரில் உருவாகவுள்ளது. இதில், அப்துல் கலாம் வேடத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை ஆதி புருஷ் பட இயக்குனர் ஓம்ராவத் இயக்கவுள்ளார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment