விவாகரத்து வழக்கில் தொடர்ந்து எஸ்கேப் ஆகும் தனுஷ் - ஐஸ்வர்யா!.. என்னதான் பிளான்?!...

by ராம் சுதன் |

Dhanush aishwarya: நடிகர் தனுஷ் 2004ம் வருடம் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வீட்டை விட்டு வெளியேறி தனுஷின் வீட்டிற்கு ஐஸ்வர்யா போய்விட்டதால் ரஜினியும் வேறுவழியின்றி திருமணத்திற்கு சம்மதித்தார். அதேநேரம், ரஜினியின் குடும்பம் தனுஷின் குடும்பத்தோடு ஒன்றவில்லை.

சம்பந்தி என்ற மரியாதையையோ, முக்கியத்துவத்தையோ கூட ரஜினி குடும்பம் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவுக்கு கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதேபோல், தனுஷின் குடும்பத்தினரிடம் ஐஸ்வர்யாவும் நெருங்கி பழகவில்லை எனவும் சொல்லப்பட்டது.

உதாரணத்திற்கு தனுஷுன் குடும்பம் தேனியில் உள்ள தங்களின் குலதெய்வ கோவிலுல்கு சென்றால் ஐஸ்வர்யா செல்ல மாட்டார். அதோடு, சூப்பர்ஸ்டாரின் மகள் என்கிற இமேஜில் பல முடிவுகளை அவர் தன்னிச்சையாக எடுத்திருக்கிறார். இப்படி சில விஷயங்களில் ஐஸ்வர்யா நடந்து கொண்டது தனுஷுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் 17 வருடங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்தனர்.

இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். அந்த நிலையில்தான் கடந்த 2022ம் வருடம் ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்தார். அதன்பின், தனியாக வீடு எடுத்து தங்கினார் ஐஸ்வர்யா. அவரின் மகன்கள் இருவரிடமும் இருந்து வருகிறார்கள். ஒருபக்கம், தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைந்துவிடுவார்கள் என பலரும் எதிர்பார்த்தனர்.

கஸ்தூரி ராஜோவோ, ரஜினியோ அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், தனுஷ் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. சில மாதங்களுக்கு முன்பு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தார். இருவரும் மனம் ஒத்து பிரிந்துவிட்டதால் விரைவில் விவாகரத்து கிடைக்கும் என எதிர்பர்க்கப்பட்டது.

ஆனால், ஏப்ரல் 15ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்து அக்டோபர் 7ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், 7ம் தேதியும் இருவரும் ஆஜராகவில்லை. எனவே, அக்டோபர் 19ம் தேதியான இன்று வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், இன்றும் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, நவம்பர் 2ம் தேதி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இருவருமே விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துவிட்டு தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வராமல் இருப்பதால், விவாகரத்தில் அவர்களுக்கு விருப்பம் இல்லையா?.. இல்லை இருவரும் பிஸியாக இருக்கிறார்களா? என பல கேள்விகள் எழுந்திருக்கிறது.

Next Story