அப்போ கன்பார்மா? அப்பாவால் மீண்டும் ஒன்று சேர்ந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:57  )

Dhanush Aishwarya: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் மீண்டும் இணைந்திருக்கும் ஆச்சரிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் தனுஷை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். பிரபல தம்பதிகள் ஆன இவர்கள் தங்களுடைய விவாகரத்தை 2022 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இருந்தும் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த வருட ஏப்ரல் மாதத்தில் தான் மனமொத்து பிரிவதாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கின் மீதான விசாரணை அக்டோபர் மாதம் நடந்தது. ஆனால் முதல் வாய்தாவிற்கு இருவரும் ஆஜராக இல்லை என கூறப்படுகிறது.

இதனை அடுத்து இவர்களின் விவாகரத்து வழக்கை அக்டோபர் 19ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர். இதனால் இருவரும் இணைய முடிவெடுத்திருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வைரலாகி வந்தது. இந்நிலையில் தற்போது இருவரும் மீடியாக்கள் ஒன்றாக தோன்றி இருக்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் இன்று உலகம் எங்கும் வெளியானது. இதனை காண ரோகிணி தியேட்டருக்கு தாய் மற்றும் தங்கை, மகன்களுடன் ஐஸ்வர்யா சென்றிருக்கிறார். அதை தியேட்டரில் தான் நடிகர் தனுஷ் வேட்டையன் திரைப்படத்தை கண்டதாக கூறப்படுகிறது.

சில வருடங்கள் கழித்து இருவரும் ஒரே இடத்தில் இருந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் இதுகுறித்து ஆச்சரியமாக பேசி வருகின்றனர். விரைவில் இவர்கள் ஒன்றை சேர வேண்டும் என்பதும் ரஜினிகாந்தின் ஆசை என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

Next Story