புருஷனை கலாய்ச்சா சும்மா இருப்பாங்களா… திடீர் முடிவில் ஐஸ்வர்யா, தனுஷ்.. நடக்குமா?
Aishwarya rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷிடையே விவாகரத்து பிரச்சினைகள் சுமுக முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.3, லால் சலாம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவருக்கும் கோலிவுட்டின் முன்னணி நடிகரான தனுஷ் இருக்கும் 2004 ஆம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் முடிந்தது.
இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருமே காதல் ஜோடிகள் போல சுற்றி வந்த நிலையில் திடீரென தாங்கள் இருவரும் பிரிய இருப்பதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தகவல் கிசு கிசுக்களாக வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றதாகவும் கூறப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தை இருவருக்கிடையே நடத்தப்பட்டது. இருந்தும் இருவரும் சமாதானம் ஆகாத நிலையில் தங்கள் சமூக வலைதள பக்கங்களின் மூலம் விவாகரத்தை அறிவித்தனர்.
இருந்தும் பிரிந்த பின்னரும் கூட சமூக வலைதள பக்கங்களில் இருந்து ஒருவர் இன்னொருவரை அன்பாலோ செய்யாமல் இருந்தனர். ஐஸ்வர்யாவின் புகைப்படங்களுக்கு தனுஷ் சமீப காலங்களாக லைக் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது.
இருவரும் முறையாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கை பதிவு செய்திருக்கின்றனர். அந்த வழக்கில் இந்த மாதம் நடந்த விசாரணையில் இருவரும் நேரில் ஆஜராகாமல் தவிர்த்ததாக கூறப்படுகிறது. ஒரு வேலை இருவருக்கும் மனமாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா என்ற கேள்வி தற்போது எழுந்து வருகின்றது.
விரைவில் இருவரும் இணைய முடிவெடுத்திருப்பதாகவும் கோலிவுட்டில் கிசு கிசுக்கள் எழுந்திருக்கிறது. பல பிரபலங்களின் விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் என பலரும் விமர்சித்து வந்த நிலையில் தன்னுடைய திருமணத்தை மீண்டும் தனுஷ் தக்க வைத்தால் பெரிய ஆச்சரியம்தான் என பேச்சுக்கள் அடிபட தொடங்கி இருக்கிறது.