பிரபலம் கொடுத்த ஆறு லட்சம்.. போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு! தனுஷ் பேசியதன் பின்னணி

by ராம் சுதன் |

இன்று தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருப்பவர் நடிகர் தனுஷ். சமீப காலமாக அவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்கள் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

சமீபத்தில் அவர் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் ஒட்டுமொத்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் போல தனுஷ் பேசி இருந்தாலும் அதிலும் சில பேர் சில விமர்சனங்களை முன்வைத்தனர்.

அதாவது சுசித்ராவை டார்கெட் செய்தே தனுஷ் பேசியிருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள் .ஏனெனில் தனுஷ் பேசும் போது 'ஏகப்பட்ட சிக்கல்களையும் போராட்டங்களையும் கடந்து தான் வந்திருக்கிறேன். என்னுடைய உண்மையான ரூபம் என்ன என்பது என்னை சுற்றி இருக்கும் நண்பர்களுக்கும் என் குழந்தைகளுக்கும் என்னை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கும் தெரியும் 'எனக் கூறி இருந்தார்.

அதனால் இது சுசித்ராவுக்கு அவர் கொடுத்த பதிலடியாக கூட இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இன்னொரு பக்கம் அவர் போயஸ் கார்டனில் ரஜினி வீட்டிற்கு சரிசமமாக பிரம்மாண்டமாக ஒரு வீட்டைக் கட்டி இருக்கிறார். அதைப்பற்றி அவர் பேசும்போது 16 வயதில் ரஜினி வீட்டு முன்பு நின்று இருக்கிறேன். அந்த வீட்டை நான் வியந்து பார்த்திருக்கிறேன்.

எப்படியாவது இங்கு நாம் ஒரு வீடு வாங்க வேண்டும் என அப்பவே நான் நினைத்தேன் என்பது போல கூறியிருந்தார் தனுஷ். இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் ஒரு பிளாஷ் பேக் ஒன்றை பேட்டியில் கூறி இருக்கிறார்.

அதாவது துள்ளுவதோ இளமை படம் தான் தனுஷ் அறிமுகமான முதல் திரைப்படம். அந்தப் படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தாலும் டைட்டில் கார்டில் கஸ்தூரி ராஜா பெயர் தான் போடப்பட்டிருக்கும். ஆனால் படத்தின் கதை திரைக்கதை வசனம் எல்லாம் செல்வராகவன் தான்.

இந்த நிலையில் படத்தை முடிப்பதற்குள் அவர்கள் பட்ட பாடு கொஞ்சநஞ்சம் இல்லை. சில நேரங்களில் 5000 ,2000 கூட தேவைப்படுமாம். அப்போது மதுரை அன்பு செழியனிடம்தான் ஆயிரங்களில் பணத்தை கடனாக வாங்கி படத்தை முடித்து இருக்கிறார்கள்.

இருந்தாலும் ஒரு ஆறு லட்சம் கொடுத்தால்தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற ஒரு இக்கட்டான நிலைக்கு வந்த போது அப்போதும் மதுரை அன்புவிடம் தான் இவர்கள் ஓடி இருக்கிறார்கள். அந்த நேரத்திலும் மதுரை அன்பு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆறு லட்ச ரூபாயை சாதாரணமாக தூக்கிக் கொடுத்தாராம்.

இதைப்பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறும்போது அன்று மதுரை அன்பு ஆறு லட்சம் கொடுக்கவில்லை என்றால் இன்று நாம் தனுஷை பார்த்திருக்க முடியாது. ரஜினியின் மருமகனாக மாறி இருக்க முடியாது. போயஸ் கார்டனில் ஒரு வீட்டை கட்டி இருக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு நபர் இருக்கிறார் என்பதே நமக்கு தெரியாமல் போயிருக்கும் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

இதன் காரணமாகவே தான் மதுரை அன்புவிடம் தனுஷின் ஒட்டுமொத்த குடும்பமும் நன்றி கடனாக எப்போதும் தங்கள் அன்பை செலுத்தி கொண்டே இருக்கின்றனர். அதோடு மதுரை அன்புக்கு எதிர்காலத்தில் ஒரு படம் பண்ணி தருவதாகவும் தனுஷ் கூறியிருப்பதாக வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

Next Story