Categories: latest news

சொந்த படத்தின் ஆடியோ லாஞ்சுக்கே வராத தனுஷ்.. இதுதான் காரணமா?.. வெளிவந்த தகவல்!.

Actor Dhanush: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து தனுஷ் தற்போது தன்னை சிறந்த இயக்குனராகவும் நிரூபித்து இருக்கின்றார். கடைசியாக தன்னுடைய 50வது படமான ராயன் என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் தொடர்ந்து இயக்குனராகவும் படங்களை இயக்கி வருகின்றார் நடிகர் தனுஷ்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: ராயன் திரைப்படத்தை இயக்கி முடித்த கையுடன் ஒரு காதல் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று களமிறங்கிய தனுஷ் இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற படத்தை இயக்கியிருக்கின்றார். இப்படத்தின் மூலமாக தனது அக்கா மகன் பவிஷை ஹீரோவாக அறிமுகம் செய்து இருக்கின்றார்.

இப்படத்தில் ஏகப்பட்ட இளம் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தில் இருந்து வெளியான டீசர், பாடல்கள், டிரைலர் அனைத்துமே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் படம் வருகிற 21ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.

முன்னதாக பிப்ரவரி 7-ம் தேதி ரிலீஸ் ஆக இருந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் காரணமாக பிப்ரவரி 21ஆம் தேதிக்கு படத்தை தள்ளி வைத்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை இயக்கியது மட்டும் இல்லாமல் நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனத்தின் மூலமாக இப்படத்தை தயாரிக்கவும் செய்திருக்கின்றார்.

படத்தின் ஆடியோ லான்ச்: இன்று சென்னையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷை தவிர படத்தில் நடித்த நடிகர்கள் மேலும் தனுஷை வைத்து படம் இயக்கப் போகின்ற இயக்குனர்கள் ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சைமுத்து, விக்னேஷ் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

அதனை தொடர்ந்து இட்லி கடை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்த அருண் விஜய் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தனுஷ் ஏன் வரவில்லை. படத்தின் இயக்குனர் ஒரு பக்கம் மேலும் படத்தின் தயாரிப்பாளர் என இரண்டுமாக இருக்கும் தனுஷ் இந்த நிகழ்ச்சி கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கு பதில் கிடைத்துள்ளது.

அதாவது நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை என்கின்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் படு பிஸியாக இருந்து வருகின்றார். இதன் காரணமாகத்தான் இங்கு அவர் வர முடியவில்லை என்பதை அவரின் மேனேஜர் ஸ்ரேயாஸ் அந்த ஆடியோ லாஞ்சில் கூறியிருக்கின்றார். மேலும் அருண் விஜயையும் இட்லி கடை படத்தின் பாடல் படப்பிடிப்பை முடித்துவிட்டு தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், நடிகர் தனுஷ் பிஸியாக அங்கு வேலை பார்த்து வருவதாகவும் கூறியிருந்தார்.

ramya suresh

Recent Posts

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

25 minutes ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

55 minutes ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

3 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

6 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

18 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

19 hours ago