Categories: Cinema News latest news

வெற்றிமாறன் போனா என்ன!.. விஜய் பட இயக்குனரை தட்டி தூக்கிய தனுஷ்!…

Dhanush: நடிகர் தனுஷும், வெற்றிமாறனும் நெருக்கமான நண்பர்கள். இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவிடம் சினிமா கற்றவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய முதல் படமான பொல்லாதவன் படத்தில் தனுஷே ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் ஹிட் அடித்தது.

எனவே, அடுத்து மீண்டும் தனுஷை வைத்து ஆடுகளம் படத்தை எடுத்தார் வெற்றிமாறன். இந்த படம் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்தது. அதோடு, தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மாறினார் வெற்றிமாறன். எனவே, எல்லோராலும் அவர் கவனிக்கப்பட்டார்.

நல்ல நாவல்களை திரைப்படமாக்குவதில் ஆர்வம் கொண்டவர் வெற்றிமாறன். ஒரு ஆட்டோ ஓட்டுனர் தன் சொந்த வாழ்வில் சந்தித்த பிரச்சனையை நாவலாக எழுத அதை வைத்து விசாரணை என்கிற படத்தை எடுத்து அதிர வைத்தார் வெற்றிமாறன். இந்த படத்தை தனுஷ் தயாரித்திருந்தார்.

அதேபோல், மீண்டும் தனுஷை வைத்து வட சென்னை, அசுரன் ஆகிய படங்களை எடுத்தார் வெற்றிமாறன். இந்த இரண்டு படங்களுமே பேசப்பட்டதோடு அசுரன் படத்திற்காக மீண்டும் தேசிய விருது பெற்றார் தனுஷ். அடுத்து தனுஷும், வெற்றிமாறனும் வட சென்னை 2 படத்திற்காக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சமீபத்தில் குபேரா பட விழாவில் பேசிய தனுஷ் அடுத்த வருடம் வட சென்னை துவங்கும் என சொல்லியிருந்தார். ஒருபக்கம், சூர்யாவை வைத்து எடுப்பதாக இருந்த வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்ட நிலையில், சிம்புவை வைத்து ஒரு கேங்ஸ்டர் படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இது வட சென்னை 2 என சிலர் சொல்கிறார்கள். இல்லை இது வட சென்னையை மையப்படுத்திய வேறு கதை எனவும் சொல்கிறர்கள்.

இதை தனுஷிடம் வெற்றிமாறன் சொன்னபோது ‘தாராளமாக செய்யுங்கள்’ என சொல்லிவிட்டாராம். அதோடு, அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். ஜனநாயகன் படத்தின் வேலைகள் முடிந்தபின் இந்த படத்தின் வேலைகள் துவங்கும் என சொல்லப்படுகிறது.

Published by
சிவா