More
Categories: Cinema News latest news

வயசு பசங்களை சீரழிச்சதே தனுஷ் குடும்பம்தான்!… பொங்கும் பிரபல இயக்குனர்!…

Actor dhanush: சினிமாவில் நஷ்டப்பட்டு கடைசியாக ஒரு படத்தை எடுப்போம் என கஸ்தூரி ராஜா ஒரு படத்தை துவங்கினார். மகன் பிரபுவை தனுஷ் என பெயர் மாற்றி அந்த படத்தை எடுத்தார். ஆனால், சரியாக வரவில்லை. உள்ளே புகுந்த செல்வராகவன் ‘எனக்கு இத்தனை லட்சம் கொடுங்கள்.. நான் எடுத்து கொடுக்கிறேன்’ என சொல்ல கடன் வாங்கி அந்த படத்தை எடுத்தார்.

அப்படி உருவான திரைப்படம்தான் துள்ளுவதோ இளமை.. படத்தில் நிறைய கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. குழந்தைகள் முன்பே அப்பா படுக்கையறையில் மனைவியுடன் இருப்பது உள்ளிட்ட பல காட்சிகள் அதில் இருந்தது. எனவே, பலரும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் சொன்னார்கள்.

Advertising
Advertising

ஆனால், படம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அடுத்து தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை எடுத்தார் செல்வராகவன். இதிலும், கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அடுத்தவன் காதலியை அடைய நினைப்பது, அதற்காக கொலை செய்வது என தனுஷின் கதாபாத்திரம் ஒரு சைக்கோ போல சித்திரிக்கப்பட்டிருந்தது. இந்த படமும் வெற்றி பெற்றது.

தனுஷ் படங்கள் என்றாலே கிளுகுளுப்பு காட்சிகள் இருக்கும் என்கிற இமேஜ் உருவானது. அதிலும், அண்ணன் செல்வராகவனோடு கை கோர்த்தால் சொல்லவே தேவையில்லை. அதன்பின் தனுஷ் நடித்த பல படங்களிலும் கிளுகிளுப்பு காட்சிகள் இடம் பெற்றிருந்தது. தனுஷ் என்றாலே அவர் அப்படித்தான் நடிப்பார் என பலரும் பேசினார்கள். செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலணியிலும் அதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

ஆனால், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தனுஷ் அந்த இமேஜை மாற்றினார். ஆடுகளம், அசுரன் போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகருக்கான விருதையும் வாங்கினார். சமீபத்தில் தனுஷ் இயக்கி நடித்து வெளியான ராயன் படமும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் கற்பழிப்பு காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், ஜோடி உள்ளிட்ட சில படங்களை இயக்கிய இயக்குனர் பிரவீன் காந்தி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘துள்ளுவதோ இளமை படத்தில் சினிமாவை கசகசவென ஆக்கி, அப்பனை திட்டுவது, அப்பன் முன்னடி தண்ணி அடிப்பது, அப்பன் முன்னாடி மகன் தப்பு பண்ணுவது என கலாச்சார சீரழிவை சினிமாவில் முதலில் கொண்டு வந்ததே தனுஷ் குடும்பம்தான்’ என பொங்கியிருக்கிறார்.

Published by
ராம் சுதன்